இடுகைகள்

ஶ்ரீகாந்த் மேகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விபச்சாரக்கும்பலில் சிக்கிய காதலியை போலீஸ் காதலன் மீட்கும் கதை! -

படம்
                வீடிக்கி தூக்குடெக்குவா ஶ்ரீகாந்த், காம்னா ஆங்கிலத்தில் வெளியான டேக்கன் படத்தை தெலுங்கு மொழியில் கண்றாவியான ஒளிப்பதிவில் இசையில் எடுத்தால்... அதுதான் 'இவனுக்கு துணிச்சல் அதிகம்' என்ற தெலுங்குப்படம். தெலுங்கு படத்தலைப்பை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க கூடாது. அது தவறு. நாயகனின் பெயரைக் கூட தலைப்பாக வைக்கலாம். கிராந்தி. நன்றாகத்தான் உள்ளது. அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன? படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கூடுதல் துணிச்சல் தேவை. நீதி என்பது துப்பாக்கித் தோட்டாக்களால் வழங்கப்படுகிறது என நம்புபவர், கிராந்தி. பணிநீக்கம், கடுமையான விமர்சனம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றவாளி என தெரிந்தால் அவர்களை பாய்ண்ட் பிளாங்கில் துப்பாக்கி வைத்து சுடுவதுதான் அவரது பாணி. இப்படி செய்தால் சமூகத்தில் குற்றம் குறையும் என நம்புகிறார். கதைப்படி, நாயகனின் இந்த மூடநம்பிக்கையை அவரது மேலதிகாரியும் பெரிதாக புகார் சொல்லாமல் ஏற்கிறார். நாயகன் கிராந்திக்கு ஒரு இளம்பெண் அறிமுகமாகிறார். அவர் வேறு யாருமல்ல. அவரின் பள்ளிக்கால ரவுடித் தோழி. அவரை நாயகன் காதலிக்...

அத்தை மகளை மணம் செய்ய கேபிள் டிவி கம்பெனியைத் தொடங்கும் நாயகனின் கனவு!

படம்
                காஞ்சன மாலா கேபிள் டிவி நெட்வொர்க் ஶ்ரீகாந்த், லட்சுமி ராய்,தேஜ், சுனில், கிருஷ்ண பகவான் வசதியான பணக்கார குடும்பம். பல்லாண்டுகளுக்கு முன்னர், அவர்களின் ஒரே பெண் பிள்ளை காணாமல் தொலைந்து போய்விடுகிறாள். அவள் பெயர்தான் காஞ்சன மாலா. அந்தப்பெண்ணை நேசிக்கும் தாய் மாமன், அவளது பெயரில் கேபிள் டிவி சர்வீஸ் கொடுப்பதைத் தொடங்கி ரூபர்ட் முர்டோக் லெவலுக்கு வளர நினைக்கிறான். இந்த நிலையில் காணாமல் போன அத்தைப் பெண் திரும்ப கிராமத்திற்கு வருகிறாள். நாயகனுக்கும் அவளுக்கும் காதல் தீ பற்றியதா, தொழில் வளர்ந்ததா என்பதே கதை. முழுக்க கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாயகனும், அவனது குழுவும், கிராமத்தினரும் மட்டுமே படத்திற்கு பொருத்தமாக தெரிகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே குறிப்பாக நாயகி, அவளது தோழி, அவர்களது ஆடைகள், இறுதியாக வரும் மோசடி வில்லன் என அனைவருமே செயற்கையாக தெரிகிறார்கள். படத்தில் வில்லன் கிருஷ்ண பகவான். அவரது பாத்திரம் பொம்பளை சோக்கு பேர்வழி. இதனாலோ என்னமோ, அவரது ஒன்லைன் கவுன்டர்களில் உள்ள சுவாரசியம் பாத்திரத்தின் தன்மையில் இல்லை. டிவி...