இடுகைகள்

இஎஸ்பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

படம்
  லெதோலாஜிகா (Lethologica) நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  தேஜா வூ (Deja Vu)  தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போ