இடுகைகள்

யுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங்கி வந்தார். ச