இடுகைகள்

கேலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

கனவு காண்பதில் எந்த சமரசமும் தேவையில்லை! - சித்தானந்த் சதுர்வேதி

படம்
சித்தானந்த் சதுர்வேதி  நடிகர்.  உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி மாறியிருக்கிறது? கல்லி பாய் படத்தில் நடிக்கும்போது நான் ராப் பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் கிடைக்கும் இடைவெளியில் பாடல்களை எழுதிக்கொண்டிருப்பேன். இதைப்பார்க்கும், விஷயத்தை கேள்விப்படும் பலரும் நான் உண்மையில் ராப்பாடகர் என நினைப்பார்கள். நான் எழுதுவது மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  பண்டி ஆர் பப்ளி படத்தின் கதையைக்கேட்ட பிறகு, அந்த பாதிப்பில் நான் நீண்ட பாடல் ஒன்றை எழுதினேன். எனது பாத்திரங்களை மையப்படுத்தி நான் டைரி ஒன்றை எழுதி வருகிறேன். நான் அதை எழுதுவதோடு அதனை பதிவு செய்தும் வருகிறேன். நடிப்பிற்கு நான் இப்படித்தான் தயாராகிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது, நான் இப்படி பதிவு செய்த எனது குரலை கேட்பேன். இது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள உதவுகிறது. நான் இப்படி பாத்திரத்திற்குள் உள்ளே சென்றபோது, அந்த பாத்திரம் எப்படி யோசிக்கும் என்றுதான் நினைப்பேன். சிந்திப்பேன். நான் இப்படித்தான் எனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை நடிக்கிறேன். எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? ச
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோசகர்கள் உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற

சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!

படம்
                  பல்வேறு விழாக்கள் , கலந்துரையாடல் , நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா ? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான் . இது அனைவருக்கும் என்று கூற முடியாது . சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும் . மது அருந்துபவர்கள் , வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும் . இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள் . பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள் . அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும் . ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது . மக்கள் தனியாக வசிக்கிறார்கள் . வாழ்கிறார்கள் . எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது . பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது , நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும் . அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம் . தன்னைப்பற்றிய கவனம் , பதற்றம் இல்லாமல் இருக்

எந்த ரத்தம் உசத்தி?

படம்
மும்பையில் டாக்டர் பாயல் தத்வி, மூத்த மாணவிகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி எப்போதும்போல அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. ஏனெனில் சாதிமுறையை ஆதரிக்கும் அரசு, அதனைப் பயன்படுத்தியே தேர்தலிலும் வென்று அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. அரசு எப்படி இதில் மாணவர்களுக்கு உதவப்போகிறது? கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார். தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும். புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே  உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்கள்.