எந்த ரத்தம் உசத்தி?
கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார்.
தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும்.
புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது.
தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும்.
உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்கள். அப்படி தெரியவில்லையெனில், தெரா ஜாத் கியா ஹை? என நேரடியாகவே ஜாதியைக் கேட்டுவிடுவார்கள்.
கோட்டாவில் வந்தவர்கள் என்றால் நிலைமை இன்னும் சிரமம். நாங்கள் இத்தனை மதிப்பெண்களை எடுத்தும் சீட் கிடைக்கவில்லை. உங்களுக்கு கோட்டாவில் கிடைத்துவிட்டதா என கேலி பேசுவார்கள். படிப்பு முடியும் வரை தொடரும். இட ஒதுக்கீடு பற்றி புகார் சொல்லும் மக்கள் ஏன் ஜாதி, தீண்டாமை பற்றி பேச மாட்டேன்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்கிறார் தன் குடும்பத்தின் முதல் மருத்துவப் பட்டதாரியான ஷிகா கௌதம்.
சகாரன்பூரில் செயல்படும் ஷேக்ஐ அல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் மருத்துவக்கல்லூரியில் இன்னுமொரு அநீதி நடைபெறுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்லூரி மெஸ்ஸில் தனி பெஞ்சுகள் உண்டு. அதில் அவர்களோடு வேறு ஜாதிக்கார ர்கள் யாரும் உட்காருவதில்லை. வேறு யாராவது அப்படி உட்கார்ந்தால் உடனே மூத்த மாணவர்கள் அவர்களை அடித்து உதைத்து தாழ்த்தப்பட்டவர்களோடு பேசக்கூடாது என எச்சரிப்பது வழக்கம் என அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கிறார் சாவி ஷைகல் என்ற பல்மருத்துவத்துறை மாணவர். இவரது நண்பரின் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது.
இனிவரும் காலமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிக சிரம மான காலகட்டமாகவே இருக்கும். எனவே, படிக்கும் லட்சியத்தை மனதில் வைத்து கேலி, கிண்டல்களை ஒதுக்கி படித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். தேர்ச்சி, தோல்வி என்பது வாழ்வில் நேர்வதுதான். ஆனால் வெற்றி என்பதற்கு தாமதமாகலாம். ஆனால் அது நிச்சயம் கிடைக்க கூடியதுதான். தயங்காதீர்கள். மனச்சலனமுறாதீர்கள்.
நன்றி: டைம்ஸ்
படம்: இந்தியா டுடே