சவாலே பன்ச் வசனங்கள்தான் - பாந்தம் படம் எப்படி?


Image result for pantham


பாந்தம் (தெலுங்கு)

சக்கரவர்த்தி ரெட்டி

கதை வசனம்: பாபி கோலி, ரமேஷ் ரெட்டி

ஒளிப்பதிவு: பிரசாத் முரல்லா

கோபிசுந்தர்



Image result for pantham


உருப்படியான விஷயம்

படத்தின் ஒளிப்பதிவுதான். கதாநாயகின் அழகை அம்சமாக காட்டுவதிலிருந்து அதிரடி சண்டைக்காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. கோபி சுந்தரின் இசை பாடல்களில் பாந்தமாக மனதை தழுவுகிறது.


Related image

ஐயகோ.......

சக்கரவர்த்தி ரெட்டியின் இயக்கமும், ரமேஷ் ரெட்டியின் வசனமும் எப்படா படம் முடியும் என துயர நிலைக்கு தள்ளுகின்றன. ஏண்டா இப்படி அடிக்கிறே என்று வில்லனின் ஆள் கேட்கும் கேள்விக்கு ஐந்து நிமிடம் பன்ச் பேசுகிறார் கோபி சந்த். எங்க பாடி தாங்குமா வாத்யாரே?

ஜென்டில்மேன் டைப் கதை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு காட்சியைக் கூட சொல்ல முடியவில்லை. மனதை சென்டிமெண்டாக உருக்க, விபத்தில் பலியானவர்கள் அரசு அலுவலகங்களில் படும் பாட்டை சொல்லுகிறார்கள். தனியாகத் தெரிகிறது.

மற்றொரு லூசு ஹீரோயின். கொள்ளையடித்து உதவும் ஹீரோவைக் கட்டிப்பிடித்து காதலித்து பாரீனில் பாடல் பாடி ஆடுகிறார். காதல் காட்சி, சோக காட்சி என அனைத்திலும் மெஹ்ரீன் அழகாக இருக்கிறார். அதற்காக இயக்குநரை மன்னித்துவிடலாம். பாடலை அழகாக்குகிறார் என விட்டுவிடலாம்.

Image result for pantham fight scenes

அச்சச்சோ...

கோர்ட்டில் நடைபெறும் காட்சிகள், சிறையில் வில்லனின் ஆட்களைப் போட்டு பொளக்கும் காட்சிகள் எல்லாம் அடடா அப்பப்பா ரகம். பாந்தம் என்றால் சவால் என்று அர்த்தமாம். உண்மையில் இயக்குநர், தைரியமிருந்தால் என் படத்தைப் பார் என சவால் விடுவதாகவே தெரிகிறது. கோபிசந்தின் 25 ஆவது படம் வேறு. கர்த்தரின் புனித ஆவி சக்கரவர்த்தியை மன்னிப்பதாக.....

-கோமாளிமேடை டீம்