வாசனைத்திறனின் வரலாறு!



வாசனை நுகர்வுத்திறன்
Image result for nose and smell


நுகர்வுத்திறன் என்பது ஐம்புலன்களின் வரம். உணவுப்பொருள் உப்பிருக்கிறதா, வெந்திருக்கிறதா என்பது வரை வாசனை மூலமே கண்டுபிடிக்க முடியும். மோப்பம் பிடிப்பது என்ற வார்த்தை இல்லாமல் துப்பறியும் நாவல்களும், கௌபாய் காமிக்ஸ்களும் கிடையாது.

காரணம், கற்காலத்தில் வேட்டைக்குச் செல்லும்போது உடலின் அத்தனை உறுப்புகளும் விழித்திருந்தால்தான் உயிர் பிழைக்க முடியும். அதில் முக்கியமானது, காதும், மூக்கும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் காட்டில் வேட்டையாட வந்த விலங்குக்கே நீங்கள் இரையாகவேண்டியதுதான்.


அதுபற்றி தகவல்களைப் பார்ப்போம்.


நமது உடலிலுள்ள 2 சதவீத மரபணுக்கள் வாசனைகளைக் கண்டறிய உதவுகின்றன. 


1756 ஆம் ஆண்டு  ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் கார்ல் லினாஸ் வாசனை நுகர்வை ஏழு வகைப் பிரிவாக பிரித்துள்ளார். 


அமெரிக்க மக்களில் 17 சதவீதம் பேர்களுக்கு வாசனைகளை நுகர்ந்து கண்டறிவதில் பிரச்னை உள்ளது. 


மனிதனின் மூளையில் உள்ள நியூரான்கள் மூலம் 1 ட்ரில்லியன் வாசனைகளை கண்டறிய முடியும். 


வாசனைகளைக் கண்டறிவதில் மனிதர்களுக்கு ஒரு சதவீதமும், நாய்களுக்கு 12.5 சதவீதமும் மூளையில் உள்ள அணுக்கள் வாசனைகளைக் கண்டறிவதில் உதவுகின்றன. 

நன்றி: க்வார்ட்ஸ்