கிண்டல்களுக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகள்!
பள்ளிகளில் சாதி,பொருளாதாரம் சார்ந்த கிண்டல்கள் சகஜமாக நடைபெறும். தற்போது கூடுதலாக ஆணோ, பெண்ணோ பாலினம் சார்ந்து கிண்டல்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக டெல்லி யுனெஸ்கோ ஆய்வுக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 சதவீத குழந்தைகள் நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் கடுமையான கிண்டல்களைச் சந்திக்கின்றனர்.
43 சதவீத குழந்தைகள் பாலியல் ரீதியாக பல்வேறு தாக்குதல்களை தொடக்கப் பள்ளிகளில் சந்திக்கின்றனர்.
இதில் 18 சதவீத அறிக்கைகள் பள்ளி நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன.
கடுமையான கிண்டல்கள், இன, சாதி, பாலின வேறுபாடு பிரச்னைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் அளவு 70 சதவீதம். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறி வருகின்றனர்.
இதில் 33 சதவீதம் பேர் கிண்டல், கேலிகளால் பள்ளியை விட்டே விலகி விடுகின்றனர்.
நன்றி: டைம்ஸ்
Image: Kids helpline