பிளாஸ்டிக்கை என்ன செய்யலாம்?
கடலில் பெருகியுள்ள பிளாஸ்டிக்குகளை சேகரித்தாலும் அதனை என்னசெய்வது என்ற குழப்பம் அனைவருக்குள்ளும் உள்ளது. தற்போது பிளாஸ்டிக்கை திரும்ப கடலுக்குள்ளே பயன்படுத்தலாம் என மாற்றி யோசித்துள்ளது தேசிய கடல்சார் ஆராய்ச்சியகம்(NCCR).
பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை உருக்கி செயற்கையான பாறை போன்ற பொருட்களாக்க வேண்டும். பின்னர், அதனை நீர்ப்பாசி போன்றவற்றின் வாழிடமாக்கி பயன்படுத்தலாம்.
இதனால், அழியும் நிலைகளிலுள்ள பவளப்பாறைகளைக் காக்கலாம் என்கிறது ஆராய்ச்சியாளர் கூட்டம்.
பிளாஸ்டிக்குகளை முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் ஆராய்ச்சி வழியாக கண்டுபிடித்த சில விஷயங்களை சோதித்து களப்பணியில் இதனைச் செய்யலாம் என்கிறார் மேற்சொன்ன அமைப்பின் இயக்குநர் எம்வி ரமணமூர்த்தி.
கடல் ஆராய்ச்சியில் பயன்படும் வலை, கயிறு, ரப்பர் டயர்கள் ஆகியவை நீர்ப்பாசிகளுக்கான வாழிடமாக இருக்க உதவும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆறு லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கடலில் ஒதுங்குகிறது. 2016 -17 காலகட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக்குகளால் பவளப்பாறைகள் 16 சதவீதம் அழிந்துள்ளன. பல்வேறு கழிவுப்பொருட்களால் 23 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: டைம்ஸ்
மூலம் தேஜோன்மாயம்