போதைப்பொருட்களுக்கு தடை நீக்கமா?
மெக்சிகோவில் அதிபராகியுள்ள இடதுசாரி தலைவர் லோபஸ், விரைவில் போதைப்பொருட்களுக்கான தடையை நீக்கவுள்ளார். கஞ்சாவிற்கான தடையை நீக்கியதற்கும் இதற்குமான வேறுபாட்டை லோபஸ் புரிந்துகொள்ளவில்லை என பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.
மெக்சிகோவின் குவாரெரோ பகுதியில் ஹெராயின் கள்ளத்தனமாக ஏராளமாக உற்பத்தியாகி கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதியாகிறது. திருட்டுத்தனமாகத்தான். அரசுக்கு, போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் சண்டைகளைத் தடுப்பதே பெரும் வேலையாக உள்ளது. எனவேதான் இந்த முடிவு.
மெக்சிகோவில் போதைப்பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், இதற்கான வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இத்தொழில் காரணமாக ஏற்படும் வன்முறை, மெக்சிகோ கார ர்களின் உயிரைப் பறிப்பதோடு நாட்டிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முடிவைத் தொடர்ந்து ஹெராயின், பெனடாயில் ஆகிய பொருட்களை அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
லோபஸ், போலீஸ் மீது நிறைய புகார்கள் வருவதால் அவர்களிடம் போதைப்பொருட்கள் சார்ந்த விசாரணையை தருவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை தேசிய கார்டு படையை இதற்கென உருவாக்கியுள்ளார். இனி போதைப்பொருட்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இந்தப்பிரிவு கவனிக்கவிருக்கிறது.
- நன்றி: ozy