கடலை சுத்தமாக்கி டைவர்கள்!
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.
இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது.
சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது.
இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன்.
நன்றி: இகோ வாட்ச்