இடுகைகள்

குணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

படம்
  மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம்.  மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவாகிறது. அதில் ம

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

நாயின் குண இயல்புகள்!

படம்
  ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அதன் அடிப்படையான பண்பை மாற்ற முடியாது எலி வளை தோண்டுவதையோ, பாம்பு எலியை பிடித்து உண்ண வேட்டைக்கு செல்வதையோ, தவளை, நிலம் நீர் என இடம் மாறி செல்வதையோ தடுக்க முடியாது. இதைப்போலவே நாய் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, புதிய இடங்களை அடையாளம் அறிவதில் ஆர்வம் காட்டுவது   ஆகியவற்றை எப்போதும் செய்துகொண்டே இருக்கும். ஆனால், இன்று தனது நாய் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டுமென நாயை கட்டுப்படுத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால், நாய் தனது சுதந்திரமும் இயல்பும் பறிபோனதால் சாப்பிடாமல் மனச்சோர்வுக்கு உள்ளாகும். மெல்ல உரிமையாளரின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும். அதன் அடிப்படை குண இயல்புகளே மாறும்.   எனவே, நாயை அதன் இயல்புக்கு மோப்பம் பிடிக்கவோ தரையை பிறாண்டவோ அனுமதிக்கலாம். குழி தோண்டுவதை வீட்டில் தோட்டம் இருந்தால் செய்யவிடலாம். பிறரின் இடத்தில் செய்தால் நிலைமை களேபரமாகும். பொது பூங்காக்களில் நாயை சற்று சுதந்திரமாக இருக்குமாறு விடலாம். கழுத்தில் காலர் மாட்டில் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை. பிறரை கடிக்கும் குணம் கொண்ட நாய்கள் என்றால் அதை பூங்காக்களுக்கு அ

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன்

விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

படம்
              ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரிய