இடுகைகள்

உணவு விமர்சகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவை காசு கொடுத்து வாங்குவதில்லை!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல்! வீர் சாங்கி, உணவு விமர்சகர், எழுத்தாளர். உணவுத்துறை எப்படி மாறியுள்ளது? முதலில் நாங்கள் உணவகம் சென்று உணவை வாங்கிச் சாப்பிடுவோம். அதுபற்றி கருத்துகளை பத்திரிகையில் வலைப்பதிவில் எழுதுவோம். இது உணவகத்தின் வியாபாரம் சார்ந்த விஷயம் என்பதால், எங்களுக்கு உணவகங்களில் உணவு விலையின்றி கிடைக்கும். இன்று உணவகங்கள் குறிப்பிட்ட ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு பணம் தருகின்றனர். அங்குள்ளவர்கள் வந்து உணவைச்சாப்பிட்டுவிட்டு விமர்சிப்பார்கள். அதுதான் நவீன உலகில் மாற்றம் கண்டுள்ளது. இன்று அவர்களுக்கு இன்ப்ளூயன்சர்கள் என்று பெயர். அவர்கள் சமூக வலைத்தளங்களில் உணவு பற்றி பிரசாரம் செய்வார்கள். எழுதுவார்கள்.  உணவு சார்ந்த எழுத்தாளருக்கு என்ன தகுதிகள் தேவை? உணவு பற்றி எழுதும் எழுத்தாளருக்கு என்ன விஷயங்கள் தேவை என்று நினைக்கிறீர்கள். இன்று உணவுத்துறை சார்ந்து விமர்சனம் செய்து எழுதுபவர்களுக்கு பெரிய மரியாதை இல்லை. காரணம் முன்னர் உணவுபற்றி எழுதுவதற்கு நாளிதழ்களில் இடம் கிடையாது. வலைத்தளங்களில் எழுதுவார்கள். இன்று இன்ஸ்டாகிராம் அந்த இடத்தைப் பிடித்து விட்டது.