இடுகைகள்

வியாபாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார்த்த

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்

இந்திய அரசின் இ சந்தை! - வெளிப்படையான அரசு சந்தை!

படம்
அரசின் இ சந்தை - GeM இந்திய அரசு, அரசுத்துறைகளுக்கான பொருட்களை அனைவரும் அறியும்படி எளிய முறையில் வாங்குவதற்கான சந்தையை தொடங்கியுள்ளது. இதற்குப் பெயர் GeM ஆகும். பல்வேறு கட்டங்களாக இ சந்தை வலைத்தளத்தை அரசு மேம்படுத்தி வருகிறது. சிறு,குறு தொழில்களை செய்து வருபவர்கள், இத்தளத்தில் வியாபாரியாக பதிவு செய்துகொண்டு பொருட்களை அரசு துறைகளுக்கு விற்று பயன் பெறலாம். நோக்கம்! அரசின் இ சந்தை வலைத்தளத்திற்கான திட்டவரைவு 2016- 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, இ சந்தைக்கான திட்ட வரைவை வெளியிட்டார்.  வெளிப்படையான முறையில் சரியான விலையில் பொருட்களை அரசுத்துறைக்கு கொள்முதல் செய்யும் சிந்தனையில் அரசின் இ சந்தை உருவாகியுள்ளது. இதன் இயக்குநராக பொதுத்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு. தலீன் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கோல்கட்டாவின் வருவாய்துறையில் நிதியை உயர்த்த பாடுபட்டுள்ளார்.  இந்திய மாநிலங்களிலுள்ள பொருளாதார மையங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். செயல்பாடு! இதில் இணைந்துள்ள வியா

வியாபார மனிதர்களும் - மாறி வரும் காலமும்- மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சென்னைக்கு வந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அப்போது இங்கே எனது சகோதரர் பணிசெய்துகொண்டிருந்தார். குறைந்த சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் கம்பெனி பெத்த கம்பெனி. அவர் கொடுத்த குருட்டு தைரியத்தில் நான் இங்கே வந்தேன். அதிலும் முடிவெடுப்பது என்பதில் இந்தியர்கள் பெரும்பாலும் மட்டம்தான். நான் பெரும்பாலும் முடிவெடுப்பது வரும்போது அந்த வாய்ப்பை பிறருக்கு வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம். இதனை கையில் எடுத்துக்கொண்ட சகோதரர் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு கிடைத்த சம்பளம் போதவில்லை. நான் கூட வந்தால் வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள் இல்லையா அதனை பயன்படுத்தி சொகுசாக இருக்க நினைத்தார். அப்படித்தான் இருந்தார். அப்போது மயிலாப்பூரில் கோலவழி அம்மன் கோவில் அருகே தூத்துக்குடிகாரர்  வைத்திருந்த கடை இருந்தது. இன்று அவர் சில மோசடி ஆட்களால் ஏமாற்றப்பட்டு, சிரமப்பட்டு  கடையை மாற்றிக்கொண்டு வேறுபக்கம் சென்றுவிட்டார். ஆனால் அன்று இருந்த இறுமாப்பு அந்தப்பக்கம் இருந்த கடைக்கார ர்களிடம் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. பின்ன

வியாபார வியூகம் அமைப்பது எப்படி? - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி!

படம்
புத்தக விமர்சனம்! வியாபார வியூகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பொதுவாக வியாபாரம் என்பதை தமிழர்கள் மிக ரகசியமாக யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்றே செய்வார்கள். காரணம், தொழில் ரகசியம் லீக்காகி விடக்கூடாது என்பதுதான். இன்றும் கூட அமோல் கமேஷன், டிவிஎஸ், கவின்கேர், செட்டிநாடு குழுமங்கள் செயல்பாடு என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். பெருமளவு விஷயங்களை அவர்களாக கூறுவது சாத்தியம் இல்லை. இந்திய தொழிலதிபர்கள் என வரும்போது நிலைமை பரவாயில்லை. தங்களது வெற்றியை மனம் விட்டு கொண்டாடுகிறார்கள். சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, இந்த நூலில் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், திட்டங்கள், செயல்பாடு, மார்க்கெட்டிங், காலத்திற்கேற்ற புதுமை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதன்மூலம், சாதித்த நிறுவனங்கள், இவற்றைக் கண்டுகொள்ளாததால் வீழ்ந்த நிறுவனங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார். மைக்கேல் போர்ட்டர் என்று எழுத்தாளரின் ஆய்வுக்கட்டுரைகள் நூலெங்கும் விளக்கப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு புகழ்பெற்ற சிவகாசி, அடுத்துவரும் காலமாற்றங்களுக