புகையிலை அளவுக்கு சர்க்கரையும் ஆபத்தான பொருள்தான் - ஆராய்ச்சியாளர் டேவிட் சிங்கர்மேன்
டேவிட் சிங்கர்மேன் ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர் சர்க்கரை, தொடக்கத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் பொருளாக இருந்து பிறகே அனைத்து மக்கள் பயன்படுத்தும் பொருளாக மாறியது. அதைப்பற்றி விளக்கி கூறுங்களேன். வரலாற்று ரீதியாக பார்ப்போம். தொடக்கத்தில் சர்க்கரையை ஒருவர் பயன்படுத்தினால், அதில் செய்த உணவை சாப்பிடுகிறார் என்றால் அது, அவரின் செல்வ வளத்தைக் குறிப்பதாக இருந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் சர்க்கரை என்பது அனைவரும் பயன்படுத்தும் விதமாக விலை குறைந்து கிடைக்கிறது. தொடக்கத்தில் கரும்பில் தயாரிக்கும் சர்க்கரை எளிதாக அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. ஐரோப்பியர்கள், சர்க்கரை விலையில் கிடைத்த லாபத்தை பேராசையோடு அடையாளம் கண்டனர். லாபத்தை அதிகரிக்க அதை பெருமளவு தோட்டமாக போட முடிவெடுத்தனர். இப்படித்தான் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்கா, லூசியானா, அட்லாண்டிக் தீவுகளான மெடெய்ரா ஆகியவற்றில் கரும்பு தோட்டங்களை அமைத்தனர். இதில் வேலை செய்ய அடிமைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதமும் கொடூரமாக இருந்தது. மனித தன்மையோடு அடிமைகள்...