இடுகைகள்

வட இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ