இடுகைகள்

முன்னேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

படம்
  நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே சீஃப் - பெண்கள் முன்னேற்றம் ரீகுரோ வேளாண்மை சேவைகள் ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம் டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 சீஃப் பெண்களுக்கான   உயர்வே நாட்டின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி   சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது. #chief       மெர்காடோ லிப்ரே லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம். 2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில்

நம்பிக்கை ஊட்டும் எதிர்கால தொழில்துறை தலைவர்கள் - ஃபோர்ப்ஸ் 500 இதழ்

படம்
  சாரா பாண்ட், எக்ஸ்பாக்ஸ் பிரிவு தலைவர்.  எதிர்கால தலைவர்கள் ஃபோர்ப்ஸ் 500 இதழ்   சாரா பாண்ட் சாரா பாண்ட் Sara bond நிறுவன துணைத்தலைவர் எக்ஸ்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட்   யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஹார்வர்ட்டில் எம்பிஏ படிப்பு. மெக்கின்சி நிறுவனத்தில் ஆலோசகர். டி மொபைல் நிறுவனத்தில் திட்ட வல்லுநராக பணியாற்றினார். பிறகு, 2017ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது எக்ஸ்பாக்ஸின் விளையாட்டுகளை, தயாரிப்புகளை வணிகப்படுத்தும் பிரிவில் பணியாற்றி வருகிறார். உலகில் எந்த இடத்தில் என்ன கருவிகளை வைத்திருந்தாலும் எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை விளையாட முடியும் சூழலை உருவாக்கியது சாராவின் சாதனை. ஜூவோரா, செக் என பட்டியலிடப்பட்ட இரண்டு பொது நிறுவனங்களின் போர்டில் உறுப்பினராக இருக்கிறார். ஊக்கமூட்டும் தலைவராக உயர்ந்து வந்துகொண்டிருக்கிறார் சாரா என நிறுவனத்தை கவனிப்பவர்கள் கூறிவருகிறார்கள். பிராடி ப்ரூவர் பிராடி ப்ரூவர் Brady brewer முதன்மை சந்தை அதிகாரி ஸ்டார்பக்ஸ் ஸ்டார்பக்ஸின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அதன் டிஜிட்டல் லாயல்டி திட்டம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிம

பொருளாதார முன்னேற்றத்தில் சாதித்த கர்நாடகா - முதலீடு கொழிக்கும் பெங்களூரு

படம்
  கர்நாடகம் கர்நாடகா மாநிலத்தின் வரைபடம் பொருளாதார வளர்ச்சியில் சாதித்த கர்நாடகா தேர்தல் பணிக்காக இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது முறை கர்நாடகாவிற்கு சென்றிருக்கிறேன். பல்வேறு எழுத்தாளர்களோடு சென்ற பயணத்தில் நிறைய ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கர்நாடகத்திற்கு அரசியல் பயணமாக சென்றேன். அங்கு நிறைய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்திற்கு சென்றபோது நிறைய வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருந்தன. அதாவது நடந்துகொண்டு இருந்தன. இம்முறை அவை முழுமை பெற்றிருந்தன. மாறாத காட்சியாக உள்ள இடங்கள் அப்படியேதான் இருந்தன என்றாலும் வளர்ச்சி என்ற பார்வையில் பார்த்தால் பரவாயில்லை என்ற மனதை தேற்றிக்கொள்ளலாம். பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகம் ஏழையான மாநிலம் கிடையாது. பெங்களூரு நகரத்தில் குவிந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் காரணமாக விவசாய முறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கைகோத்தது. இதனால் அங்கு பொருளாதார முன்னேற்றம் உருவானது. ஆண்டிற்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு முன்னேற்றம் கிடைத்தது. நாம் கருத்தில் கொள்ளவேண்டி

நிலவில் மனிதர்கள் கால் வைத்த வரலாற்று நாள்! - 53ஆவது ஆண்டு

படம்
  ஜூலை 20, 1969 நிலவில் அமெரிக்கர்கள் கால் வைக்கவே இல்லை என நிறைய கான்ஸ்பைரசி தியரிகள் உண்டு. நாம் அதன் வழி சென்றால் இந்த கட்டுரையை எழுத முடியாமல் போய்விடும். எனவே நாம் இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு அதேபக்கம் திரும்புவோம்.  நாசாவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் அமெரிக்க வீரர்கள் கால் வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது ஜூலை மாதம் 20ஆம் தேதிதான். நீளமான வாக்கியம் அல்லவா? சாதனை அந்தளவு பெரியதுதான். நிலவில் ஆராய்ச்சி செய்து மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய்.. பாருங்கள் இதை எழுதும்போது நமக்கே இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது. எப்போதும் குறைந்த தவறுகளை செய்து நிறைவாக டீல் பேசி முடிக்கும் அமெரிக்கர்கள் என சும்பைப் பயல்களா என்ன? சோவியத் ரஷ்யாவிற்கு முன்னர் நாம் தான் நிலவில் கால் வைத்து அவர்களை முந்த வேண்டும். கேவலப்படுத்தி சிரிக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிளான்.  நிலவுக்கு செல்லும் பயணக்குழுவின் தலைவர் வேறுயார் நீல் ஆம்ஸ்ட்ராங் தான். அவர் தலைமையில் தான் குழு ஒன்றாக இணைந்தது. இவருக்கு உதவி செய்த மற்றொரு வீரர் எட்வின் ஆல்ட்ரின். அப்போலோ லூனார் மாடுலின் பெயர் ஈகிள். இதன் வழியாக நீல்

புத்தக வாசிப்பு வட்டமா? அப்ஸ்காண்ட் ஆயிருங்க ப்ரோ!- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! நமக்கான பிரச்னைகள் நாம் செய்யும் செயலால் உருவாகிறது என்று சொல்லுவார்கள். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. என்ன அதன் டிசைன்தான் கொஞ்சம் வேறுவடிவில் இருக்கிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தக வாசிப்பு, விமர்சன கூட்டங்களுக்கு போவது வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். அதற்கு காரணம், அரைகுறையாக படித்துவிட்டு அந்த கூட்டத்திற்கு வருபவர்களும், எழுத்தாளரை கேள்வி கேட்டால்போதும் அவரை மடக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சினிமாவில் இயங்கும் உதவி இயக்குநர்களும்தான். இப்படி இலக்கிய அக்கறையைக் காட்டிக்கொண்டாலும் இவர்கள் படம் எடுக்கும்போது கதை என்ற தலைப்பில் தனது பெயரை மட்டுமே போட்டுக்கொள்வார்கள் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. எங்கேயோ சிக்கிக்கொண்ட கதையைத்தானே சொல்ல வருகிறாய் என இந்நேரம் யோசித்திருப்பீர்கள். அதேதான். மோசமான டைமிங்கில் மாட்டிக்கொண்ட சம்பவம். எனது மடிக்கணினி அடிக்கடி பிடிவாதம் பிடித்த குழந்தையாக வேலை செய்யமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனவே இதனை வாங்கிக்கொடுத்த டெக் நண்பரிடம் உதவி கேட்டேன். அவரைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு விஷயமா என்ற ரீதியில் எனது

சமூக பொறுப்புக்குழு எப்படி அமைக்கப்படுகிறது? - சிஎஸ்ஆர் 6

படம்
அத்தியாயம் 6 பெருநிறுவன சமூக பொறுப்பு  குழுவின் வடிவமும், செயல்பாடும்  1987 ஆம் ஆண்டு சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் பற்றி வேர்ல்டு கமிஷன் அமைப்பு, சில வரையறைகளை உருவாக்கி வெளியிட்டது. அதில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் என்பது எதிர்கால தலைமுறையினருக்கான தேவைகளை சமரசமின்றி தீர்ப்பதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியது.  இதுதொடர்பாக இந்திய அரசு, 2011 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் ஒன்பது விதிகளை உருவாக்கியது. இவை வணிக நிறுவனங்களுக்கும், அவை செய்யும் சமூக பொறுப்பு சார்ந்த திட்டங்களுக்கும் பொருந்துபவை. மேலும் ஐ.நா அமைப்பு இது பற்றிய பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது.  சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கூட இன்று சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுக்குள் வந்துவிட்டன. இவை இதனைச் செலவாகப்பார்க்காமல் முதலீடாகப் பார்ப்பது அவசியம். தொழில்நிறுவனங்கள் சரியான முறையில் இயங்கி லாபம் பார்க்க, அரசு உரிமம மட்டும் போதாது. அப்பகுதியில் வாழும் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதற்கு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் உதவும். நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதி

சட்டம் போட்டால் திருந்துவார்களா? சிஎஸ்ஆர் 5

படம்
 சமூக பொறுப்புணர்வுத் திட்டம் 5 சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? சட்டம் போட்டால் திருந்துவார்களா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக

பொறுப்பை கைகழுவிய நிறுவனங்கள் - சிஎஸ்ஆர் 4

படம்
அன்லாக் இம்பேக்ட்  அத்தியாயம் 4 பெருநிறுவன சமூகப் பொறுப்பு!  குளறுபடி செய்த நிறுவனங்கள்! இந்திய அரசு, 1960களுக்குப் பிறகு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றியது. மத்திய அரசு, சோசலிச கருத்தைப் பின்பற்றி பல்வேறு துறைகளிலும் பொதுநிறுவனங்களைத் தொடங்கியது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு குறைவாக இருந்தது. அப்படித் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவது, இமயமலை ஏறுவது போன்ற செயல்முறையாக இருந்தது.  தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியச்சந்தையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அமலாகின. இதன் விளைவாக, அரசின் கட்டுப்பாடு சந்தையில் தளர்ந்தது. தனியார் நிறுவனங்கள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக போட்டி போடத் தொடங்கின. இந்தியா தன் வளங்களைக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. கிளிப்ஆர்ட் லோகோ தனியார் நிறுவனங்களான டாடா, பிர்லா, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்பிருந்தே ஈடுபாடு காட்டி செய

சமூகத்திட்டங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? சிஎஸ்ஆர் 3

படம்
அத்தியாயம் 3 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! திட்டமிடுவது எப்படி? சமூகப் பொறுப்புத் திட்டத்தில் திட்டங்கள் தீட்டுவது, அதற்கான நிதி ஒதுக்குவது ஆகியவற்றோடு சில முக்கிய அம்சங்களும் உண்டு.  சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதோடு நிறுவனங்களின் பொறுப்பு முடிந்துவிடாது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள்தான் நிறுவனங்களின் திட்டங்களை மக்களுக்கு ஏற்றபடி உருவாக்கி உதவுவார்கள். அடுத்து, ஊழியர்களுக்கான வேலை விதிமுறைகள், தீண்டாமை அகற்றுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவையும் இதில் உள் அடங்கலாக உள்ளன. உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதில் செலவழிக்கப்படாத நிதி, அரசு கணக்குக்கு மாற்றப்படுவதும் கூட ஒருவகை வரி என்றே நிறுவனங்கள் நினைக்கக்கூடும். பெருநிறுவனங்கள் அளவுக்கு சிறுகுறு நிறுவனங்களிடம் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை வலியுறுத்த முடியாது. காரணம், அவர்களின் தொழில்முதலீடு சிறியது என்பதால்தான். ஆனால் இன்று சிறு நிறுவனங்கள் உள்ளூர் மக்களிடம் சமூகத் திட்டங்களை செயற்படுத்துவதில்