நிலவில் மனிதர்கள் கால் வைத்த வரலாற்று நாள்! - 53ஆவது ஆண்டு
ஜூலை 20, 1969
நிலவில் அமெரிக்கர்கள் கால் வைக்கவே இல்லை என நிறைய கான்ஸ்பைரசி தியரிகள் உண்டு. நாம் அதன் வழி சென்றால் இந்த கட்டுரையை எழுத முடியாமல் போய்விடும். எனவே நாம் இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு அதேபக்கம் திரும்புவோம்.
நாசாவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் அமெரிக்க வீரர்கள் கால் வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது ஜூலை மாதம் 20ஆம் தேதிதான். நீளமான வாக்கியம் அல்லவா? சாதனை அந்தளவு பெரியதுதான். நிலவில் ஆராய்ச்சி செய்து மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய்.. பாருங்கள் இதை எழுதும்போது நமக்கே இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது. எப்போதும் குறைந்த தவறுகளை செய்து நிறைவாக டீல் பேசி முடிக்கும் அமெரிக்கர்கள் என சும்பைப் பயல்களா என்ன? சோவியத் ரஷ்யாவிற்கு முன்னர் நாம் தான் நிலவில் கால் வைத்து அவர்களை முந்த வேண்டும். கேவலப்படுத்தி சிரிக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிளான்.
நிலவுக்கு செல்லும் பயணக்குழுவின் தலைவர் வேறுயார் நீல் ஆம்ஸ்ட்ராங் தான். அவர் தலைமையில் தான் குழு ஒன்றாக இணைந்தது. இவருக்கு உதவி செய்த மற்றொரு வீரர் எட்வின் ஆல்ட்ரின். அப்போலோ லூனார் மாடுலின் பெயர் ஈகிள். இதன் வழியாக நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கி நிலவில் கால் வைத்தார். மனிதனுக்கு இது ஒரு அடி ஆனால் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றம் என்ற வார்த்தையை நிலவில் இறங்கியபிறகு நீல் ஆம்ஸ்ட்ராங் கூறினார்.
இவருக்கு பிறகு 19 நிமிடங்கள் கழித்து, ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். இருவரும் சேர்ந்த நிலவில் 2 மணிநேரங்கள் செலவழித்து 21.5 கி.கி அளவுக்கு நிலவில் உள்ள சிறு கற்கள், பாறைகளை சேகரித்தனர். இருவரும் மொத்தமாக நிலவின் பரப்பில் 21 மணி நேரம் 36 நிமிடங்கள் செலவிட்டனர். நிறைய மாதிரிகள், புகைப்படங்களை எடுத்தனர். அமெரிக்கர்கள் எப்போதும் போல செய்யும் காரியம்தான். அங்கு அமெரிக்க கொடியை நட்டனர். 1967ஆம் ஆண்டு ஆய்வுக்காக வந்த அமெரிக்க விண்வெளி வீரர் கள் விபத்தில் மரணித்தனர். அவர்களுக்கான மரியாதையும் செய்தனர்.
அமெரிக்க வீரர்கள் விண்வெளிக்கு சென்று நிலவில் கால்வைத்து இந்த ஆண்டோடு 53 ஆண்டுகள் ஆகிறது.
டெல் மீ வொய் இதழ்
பிக்ஸா பே
கருத்துகள்
கருத்துரையிடுக