விலங்குகளின் உணவு சேகரிக்கும் வேறுபட்ட பழக்கம்!

 










உணவு சேகரிக்கும் விலங்குகள்!

நீர்நாய் (The Beaver)

விலங்குகள் உலகில் அதிகளவு உணவு சேகரிப்பவை, நீர்நாய் தான். 200 முதல் 2 ஆயிரம் கி.கி. அளவுக்கு சாப்பிடத்தேவையான கிளைகளை சேகரித்து வைக்கிறது. 

அகோர்ன் மரங்கொத்தி (Acorn woodpecker)

150 முதல் 200 கி.கி. வரையிலான ஓக் மரக்கொட்டையை சேகரித்து வைக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அகோர்ன் மரங்கொத்தி வாழ்கிறது. இவை, ஓக் மரங்களில் வசிக்கிறது. ஓக் மரக்கொட்டைகளைப் பாதுகாத்து வைக்க, பட்டுப்போன மரங்களின் அடிப்புறத்தை தேர்ந்தெடுக்கிறது. இவைதான் பனிக்கால உணவுக்கான சேமிப்பு கிடங்கு. 

அணில் (Squirrel)

காட்டுக்குள் அணில் கொட்டைகள், பருப்பு, பூஞ்சை என சேகரித்து சேமிக்கிறது. இப்படி சேமிக்கும் இடங்களை அணில் மறந்துவிடும்போது, அவை மண்ணில் முளைவிட்டு செடியாகி மரமாவதும் உண்டு. அணில் இந்த வகையில், 20-50 கி.கி. அளவுக்கு உணவு சேகரிப்பை செய்கிறது. 

 யூரேசியன் ஜே (Eurasian jay)

இலையுதிர்காலத்தில் கொட்டைகளை தேடி சேகரிக்கத் தொடங்கும் பறவை. நிலத்தில் கொஞ்சமும், பட்டுப்போன மரங்களில் கொஞ்சமும் கொட்டைகளை சேமித்து வைக்கிறது. 20-30 கி.கி. வரையிலான கொட்டைகளை சேமித்து வைக்கிறது. 

யூரோப்பியன் வாட்டர் வோல் (European water vole)

சிறு விலங்கான வோலின் உடல் எடை 300 கிராம். 10 முதல் 35 கி.கி. அளவில்  உருளைக்கிழங்கு, தாவரங்களை சேகரித்து சேமிக்கிறது. வோல் வாழ்விடமான மரப்பொந்துகள், குகை ஆகிய இடங்களில் உணவை சேமித்துவைக்கிறது. 


Science illustrated australia 2022


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்