காற்று வேதியியலின் தந்தை - ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட்

 









ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட் (Jan Bapista van Helmont
  1580 -1644 )

1580ஆம் ஆண்டு ஸ்பானிய நெதர்லாந்து நாட்டின் (தற்போது பெல்ஜியம்) ப்ரூசெல்ஸ் நகரில் பிறந்தார். லூவெய்ன் நகரில் அமைந்திருந்த கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்தார். 1599ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தவர், மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். ஐரோப்பா முழுவதும் பயணித்து தன் மருத்துவத் திறன்களை மெருகேற்றிக்கொண்டார். 

அக்காலகட்டத்தில் உடலுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்து, தாவரங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டது. இதனை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பாராசெல்சஸ் (Paracelsus)மாற்றினார். இவர், நோய்களுக்கு மருந்தாக வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என கூறினார். இதன்படியே செயல்பட்டார். இவரை ஹெல்மான்ட் வழிகாட்டியாகப் பின்பற்றினார்.

 ஒயின் தயாரிப்பில் வெளியாகும், வாயு, குடலில் உருவாகும் வாயு ஆகியவற்றை முதன்முதலில் ஹெல்மான்ட்  கண்டறிந்தார். இந்த வாயுக்கள்தான் , மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைட். இதனால் ஆராய்ச்சியாளர்கள், இவரை காற்று வேதியியலின் தந்தை என்றும் கூறுகின்றனர். கிரேக்க வார்த்தையான Chaos என்பதிலிருந்து கேஸ் (Gas) என்ற வார்த்தை உருவானது. ஹெல்மான்ட், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளைச் செய்து, அதைப்பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். ஆனால், இறக்கும் வரை  இக்கட்டுரைகளை வெளியிடவில்லை. ஹெல்மான்ட் மறைவிற்குப் பிறகு, அவரது மகன் 1648ஆம் ஆண்டு கட்டுரைகளை தொகுத்து நூலாக்கி வெளியிட்டார். 

https://www.lindahall.org/joan-baptista-van-helmont/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்