பாலூட்டிகளின் கரு முட்டை செல்களைப் பற்றி உலகிற்கு அறிவித்தவர்! - கார்ல் எர்னஸ்ட் வான் பேயர்













கார்ல் எர்னஸ்ட் வான் பேயர் (karl Ernst Von Baer

1792-1876)
உயிரியலாளர், இயற்கை அறிவியலாளர்

நான் எஸ்டோனியாவின் பீப் நகரில் பிறந்தேன். டோர்பட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1814ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றேன். பிறகு, ஜெர்மனியின் உர்ஸ்பெர்க் நகருக்கு இடம்பெயர்ந்தேன். அங்குதான் எனது பிற்கால ஆராய்ச்சிகளுக்கு காரணமாக மருத்துவர் இக்னாஸ் டோலிங்கரைச் சந்தித்தேன். 

அவர்தான், கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய ஊக்குவித்தார். கருவியல் துறை சார்ந்து நான் பிளாஸ்டுலா (Blastula), நோடோசோர்ட் (Notochord)ஆகியவற்றைக் கண்டறிந்தேன். 

பேயர், விலங்குகளின் உட்கரு சார்ந்த ஆராய்ச்சியோடு இன பண்பாட்டியல், புவியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். கருவுக்குள் இருக்கும் செல் அடுக்குகள் பற்றிய ஜெர்ம் லேயர் கோட்பாட்டை (Germ-layer theory) உருவாக்கினார். இதுவே நவீன கருவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது. 

1827ஆம் ஆண்டில் முதன்முறையாக பாலூட்டிகளின் கருமுட்டை செல்களைப் பற்றி அறிவியல் உலகிற்கு கூறியவர். 


https://en.wikipedia.org/wiki/Karl_Ernst_von_Baer

https://www.encyclopedia.com/people/science-and-technology/cell-biology-biographies/karl-ernst-von-baer


கருத்துகள்