இடுகைகள்

கொத்தடிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி!

படம்
  கொத்தடிமையாக வேலை செய்தவர்களை மீட்கும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றிவிட்டாரல்லவா அப்புறம் என்ன என நினைத்து விடுகிறோம். அதற்குப் பிறகுதான் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதி தொடங்குகிறது. இனி பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பது.  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், எஸ்ஆர்எல்எம் எனும் திட்டத்தின்படி, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்து அவர்களது பொருட்களை சிறகுகள் என்ற பிராண்டில் அமேசானில் சந்தைப்படுத்தி வருகின்றது.  மூங்கில் பொருட்களை கொத்தடிமை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மொபைல் போன் ஸ்டாண்ட், பிரஷ்களை வைக்கும் ஸ்டாண்ட் என பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார்கள்.  வேலூர் காட்பாடியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தவர் சண்முகம். 2013ஆம் ஆண்டு இவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். பிறகு ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வேலைகளை செய்து வந்தாலும் குடும்பத்தை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கவில்லை. ...

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வத...