இடுகைகள்

பசுமை அரசியல்5 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு

அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு     2006 போர்ப்ஸ் புள்ளிவிவரப்படி உலகப் பணக்காரர் பட்டியலில் ஆசியாவிலேயே அதிகம் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு இந்தியா எனும் புகழைப் பெற்றுள்ளது. முப்பத்தாறு கோடீஸ்வரர்கள், நூற்று தொண்ணூற்று ஒன்று பில்லியன் டாலர் சொத்துடையவர்கள் ஜப்பான் இருபத்துநான்கு கோடீஸ்வரர்களுடன் அறுபத்து நான்கு பில்லியன் டாலர் சொத்துடன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.     2008 ல் உலகின் பத்து பெரும் பணக்காரர்களில் நான்கு பேர் இந்தியர் ‘’2020 ல் அறுபது விழுக்காடு உலக உற்பத்தி, இந்தியா, சீனாவிலிருந்து தான் கிடைக்கும்’’ எனப் பெருமையுடன் கூறுகிறார்  நமது நிதியமைச்சர். இதன் மறுபக்கம் முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. இந்திய ஒருங்கிணைக்கப்படாதோர் பற்றிய தேசியக் குழு முப்பத்திரெண்டு கோடிப்பேர் இருபது ரூபாய்க்கும் கீழான வருமானம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்து அறுபத்தாறு ஆயிரத்து முந்நூற்று நான்கு விவசாயிகள் 1997 முதல் பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.     இந்தியா ஒன்பது அல்லது பத்த