இடுகைகள்

புயல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட

விநோதரச மஞ்சரி - புயல்

படம்
  விநோத ரச மஞ்சரி புயல்களுக்கு யார் பெயர் வைத்தது என கேட்கத் தோன்றும் அளவுக்கு பல்வேறு பெயர்களை உலக நாடுகள் சூட்டி வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி டிரெண்டிங்கை தொடங்கினார். அமெரிக்காவில் 1950களில் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியது. அடுத்து, இதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி ரோக்ஸி போல்டன் போராடினார். எனவே, அவருக்காக 1979ஆம் ஆண்டில் இருந்து புயல்களுக்கு பெண்களின் பெயரும் வைக்கப்படத் தொடங்கியது. உலக வானிலை அமைப்பு, புயல்களுக்கான பெயர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறது. இந்த பட்டியல் நம்மூரில் உள்ள அ, ஆ, இ, ஈ போல அந்த ஊரில் ஏ,பி,சி, டி என வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. மொத்தம் 21 பெயர்கள் இடம்பெறும். க்யூ, யூ, ஒய், இசட் ஆகிய ஆங்கில எழுத்துகள் விலக்கப்பட்டன. இந்த பெயர்கள் 2020,2021 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. ஆலங்கட்டி மழை   பெய்வது வீட்டில் கல் எறிவது போல இருக்கும். இதே வகையில் நாய், பூனை, தவளை ஆகியவை புயலில் வானில் இருந்து பொழிவதுண்டு. இன்னொரு இடத்திலிருந்து

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்கு பத்தொன்

மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

படம்
  பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.   இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா

வயிற்றுக்குள் ஓர் புயல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  10.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் நெருக்கிக்கொண்டு இருக்கும். தங்களுக்கும் வேலைகள் அதிகரிக்கும்.  கட்டுரைகளை எழுதும் வேலைகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன. முன்னமே இதற்கான கட்டுரைகளை எழுதி வைத்துவிட்டேன். அதற்கான தேதிகளை மட்டும் மாற்றினால் போதும். மாதத்திற்கு எழுதியதால் பதிப்பிக்கும் தேதியை எடிட்டர் மாற்றிச் சொன்னார். இதனால் வேலை செய்யாமல் இருக்க முயலும் கோ ஆர்டினேட்டர் கட்டுரைகளை மாற்றத் தடுமாறிவிட்டார்.  கட்டுரைகளை அழிப்பேன் என மிரட்டுவதால், உதவி ஆசிரியர்களே அவர் செய்யும் வேலையை செய்து கட்டுரைகளை வேறு தேதிகளுக்கு மாற்றினோம்.  எண்ணெய் பலகாரங்கள் எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் தட்டு முட்டு சாமான்களை உருட்டுவது போல சத்தம் எழுகிறது. சிலசமயம் பலகாரங்களின் வாசனையைப் பொறுக்க முடியாமல் சாப்பிட்டால் இரவில் வயிற்று உப்புசம், வாந்தி, பேதி ஆகிறது. உடலை பராமரிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.  எங்கள் நாளிதழ் பள்ளிகளுக்கு போகிறதா என்று தெரியவில்லை. குறைந்த பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள் என சீஃப் டிசைனர் சொன்னார். தகவல்படம் இனி நான் தான்

இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பதுதான் எனது வேலை - ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

படம்
  ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன் இயற்கை பேரிடர் வல்லுநர், யுனிசெஃப் தற்போது தாங்கள் என்ன பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இயற்கை பேரிடர்களை முன்னமே கணித்து தடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். இயற்கை பேரிடர் ,நடந்த முதல் 72 மணிநேரம் முக்கியமானது. அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.  இதற்கென சில மாதிரிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் மண்டல அளவிலான அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவோம். இப்போது தகவல்களுக்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளோம்.  நீங்கள் ஜியோமேட்டிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எனக்கு புவியியல் துறையில் ஆர்வம் உண்டு. எனக்கு 14 வயதாகும்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைப் பார்த்தேன். இந்த இயற்கை பேரிடர்தான் இத்துறையில் நான் இன்று பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் அரசு அதிகாரியான எனது தந்தை அங்குள்ள மீனவர்களை அடிக்கடி சந்திப்பார். நானும் அப்படிப்பட்ட நேரத்தில் அப்பாவுடன் கூடவே செல்வேன்.  சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பிறகு அக்கடற்புரத்திற்கு நான் சென்றேன். இயற்கை பேரிடரால் மக்கள் எப

அமெரிக்க பெண்ணின் இந்திய தெய்வ முரண்பாடுகளைப் பற்றிய அனுபவத் தொகுப்பு! நூல் புதுசு

படம்
  அமெரிக்கன் கேர்ள் இன் இந்தியா லெட்டர்ஸ் அண்ட் ரீகலெக்ஷன்ஸ் 1963-64 வெண்டி டோனிகர் ஸ்பீக்கிங் டைகர் கல்கத்தாவிற்கு முதன்முறையாக டோனிகர் வரும்போது அவரின் வயது 23. அங்குதான் சிவன், விஷ்ணு கோவில்களில் இருந்த முரண்பாட்டைப் பார்த்தார். காமமும், தூய்மையும் கலந்த வடிவம் அவரை ஈர்த்தது. இந்த நூலில் உள்ள கடிதங்கள் அனைத்துமே இதுதொடர்பாக அவர் எழுதியவையாகும். இந்துமதம், அதன் மூடநம்பிக்கைகள் பற்றி முன்னமே வெண்டிகர் நூல்களை எழுதியுள்ளார்.  டு ரைஸ் எ ஃபாலன் பீப்புள் - ஹவ் நைன்டீன்த் சென்சுரி இண்டியன்ஸ் சா தேர் வேர்ல்ட் அண்ட் ஷேப்டு அவர்ஸ்  ராகுல் சாகர்  ஜக்கர்நட் பழைய சிந்தனைகளை, தாக்கங்களை முன்வைக்கும் நூல்தான் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியர்கள் எப்படி யோசித்தார்கள், மதம், வணிகம், உலக நாடுகளுடனான உறவு ஆகியவற்றை பற்றி பல ஆளுமைகள் பேசிய, எழுதிய கருத்துகளை நூல் தொகுத்துள்ளது.  தி பீப்புள் ஆஃப் தி இண்டஸ்  பெங்குவின்  இது ஒரு கிராபிக் நாவல். நிகில் குலாத்தி, ஜொனாதன் மார்க் கெனோயெராஸ்க் நூலில் நிறைய கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிந்து சமவெளி மக்கள் யார், அவர்கள் வாழ்க்கை எப்படி முடிவுக்கு வ

இந்தியாவில் அழியும் கழுகுகளின் நிலை!

படம்
  2003ஆம் ஆண்டு தொடங்கி கழுகுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. 53 சதவீத கழுகுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.  2003 - 40,387 2007 - 32,251 2011 - 34,950 2015 - 18,645 அழிவுக்கு காரணமாக வேதிப்பொருட்கள் டைக்குளோஃபெனாக் 2006ஆம் ஆண்டு கால்நடை மருத்துவத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என அரசால் தடை செய்யப்பட்டது. இது கழுகுகளின் இறப்புக்கு முக்கியமான காரணம்.  ஆஸ்குளோஃபெனாக் டைக்குளோஃபெனாக்கிலிருந்து தயாரித்து கால்நடை விலங்குகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.  நைம்சலைட் இதை உட்கொண்ட கழுகுகளுக்கு ஆயுள் 30 மணி நேரம்தான். மெல்ல உடல் உறுப்புகள் சேதமாகும். அடுத்து சிறுநீரகம் செயலிழந்து போக மரணம் நேரிடுகிறது.  கீடோபுரோஃபென் செரிமான உறுப்புகளில் நச்சு வேகமாக பரவ, கழுகுகளுக்கு ஆயுள் 48 மணி நேரம்தான்.  பிக்கானெர், ராஜஸ்தான் 2019-2020 கால்நடைகளுக்கு பயன்படுத்தும் ஸ்டெராய்ட் அல்லாத மருந்துகளின் பாதிப்பு, மின்சாரம் பாய்ந்து இறந்துபோவது. இதன் காரணமாக 207 கழுகுகள் இறந்துபோயின.  ராய்காட், மகாராஷ்டிரா 2010 நிசார்கா எனும் புயல் பாதிப்பு ஏற்பட்டால் வாழிடம் அழிந்துபோனது. இதனால் இறந்துபோன கழுகுகளின் எண்ணிக்கை 21

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!

படம்
  pixabay அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்

செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்

படம்
      பினராயி விஜயன்/விகடன்       பினராயி விஜயன் - மகத்தான தலைவன் கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது . இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு , சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது . மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது . இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன் , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார் . இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின . இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு , பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர் . 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு , 2024 இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது . இதில் ம ம்தா , ஸ்டாலின் , பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம் . நிபா நோய்த்தொற்று , வெள்ளப்பிரச்சினை , கொரோனாவை சமாளித்தது

புயல்களுக்குள் புகுந்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
          பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ புயல்களை பின்தொடர்ந்து எப்படி தகவல்களை சேகரிக்கிறார்கள்? இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநர்கள் படை உண்டு. அந்த விமானத்தில் என்னென்ன சமாச்சாரங்கள் இருக்கும் என்று பார்த்துவிடுவோம். புரோப் பாராசூட் இந்த பாராசூட் மெல்ல கீழே விழும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே புயலின் பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. ஆறு கி.மீ. தூரத்தை கடக்க ஏழு நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கடலில் செலுத்தப்படுவது, மற்றவை காற்றின் அழுத்தம் ஈரப்பதம் வேகம், திசை ஆகியவற்றை கணக்கிட உதவுவது. ஜிபிஎஸ் ஆன்டெனா இருக்கும் இதன் மூலம் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களை சேகரிக்கிறார்கள். புயலின் வேகம். திசை ஆகியவை இதில் தெரிய வருகிறது. மைக்ரோபுரோச்சர் இந்த சிறு கருவி மூலம் சென்சார்களில் உள்ள தகவல்களை பெற்று அதனை டிஜிட்டல் வடிவிலாக்க முடியும். ரேடியோ டிரான்ஸ்மிட்டர் 0.5 நொடிகளுக்கு ஒருமுறை தட்பவெப்பநிலை, ஈரப்பதம் அழுத்தம். புயலின் தகவல்கள் ஆகியவற்றை விமானத்தின் கணினிகளுக்கு அனுப்பி வைக்கும். புயலின் நடுப்பகுதிக்கு விமானம் சென்றபிறகுதான் பாராசூட்டை கீ

புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?

படம்
            புயல்களின் வரலாறு! ஒக்கிசோபீ 1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர் பலி- 4 ஆயிரம் புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். லேபர் டே புயல் 1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர் பலி 485 இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை.  கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல்,

புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்? புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா?

படம்
          பதில் சொல்லுங்க ப்ரோ வின்சென்ட் காபோ புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்? ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான தகுதிகளை வைத்து அதன் பாதை, பலம், சேதம் ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை யூகிக்கிறார்கள். அமெரிக்கா இதனை 1953 தொடங்கி அட்டவணைப்படுத்தி பெயர் வைத்து மக்களை எச்சரித்து வருகிறார்கள். உலக தட்பவெப்பநிலை அமைப்பு புயல்களுக்கான பெயர்களை வைக்கிறது. புயல்களுக்கான பெயர்ப்பட்டியல் மொத்தம் ஆறு உள்ளது. இதில் க்யூ, யூ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகள் மட்டும் இடம்பெறாது. மற்றபடி ஏ முதல் டபிள்யூ வரையிலான எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படையான நோக்கம் எளிதாக புயலில் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதுதான். இல்லையெனில் புயல் எச்சரிக்கையை அரசு மக்களுக்கு கூறுவது கடினமாகிவிடுமே. ஒரு பருவகாலத்தில் அதிகளவு புயல்கள் வந்தால் கிரேக்க எழுத்துகளிலிருந்து புயலுக்கான பெயர்களை எடுக்கிறார்கள். புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா? முதல் பிரிவு 119 153 மணிக்கு கி.மீ வேகம் வரை இது மிகவும் வேகம் குறைந்த புயல் பிரிவு, செல்போன் கோபுரங்கள் சாய்வது, கட்டிடங்கள் இடிவது ஆகியவை நடக்கும். மின்சார கம்பங்களை சரித்துவிடு

புயலின் தன்மையைக் கணிக்கும் புயல்வேட்டையர்கள்

படம்
தெரிஞ்சுக்கோ! புயல் வேட்டையர்கள் புயல் வருகிறது என்றால் நாம் காய வைத்து துணி முதற்கொண்டு எடுத்து வைத்துக்கொண்டு, இன்வெர்டரில் டீசல் ஊற்றிக்கொண்டு தயாராக இருப்போம். இதில் சிலர் மட்டும் மிக கவனமாக சிறியவகை ஹெலிகாப்டர்களை எடுத்துக்கொண்டு புயலில் செல்வார்கள். இதன்மூலம் புயலின் தன்மையைக் கணிக்க முயற்சிக்கிறார்கள். மணிக்கு 314 கி.மீ வேகத்தில் வீசும் புயலுக்கு ஈடுகொடுத்து பறப்பது சாதாரண காரியமா? புயல் வேட்டையர்கள் இதைத்தான் செய்கிறார்கள். புயலுக்குள் சென்று உயிரோடு திரும்புவது சிரமம்தான். அறிவியல் தகவல்களை துல்லியமாக சேகரிக்க இந்த விஷயத்தை செய்கிறார்கள். புயலுக்குள் செல்லும் புயல் வேட்டையர்கள் அதனை ஆய்வு செய்து முழுமையாக தகவல் திரட்ட தேவைப்படும் நேரம் 8-12 மணிநேரம். இவர்களின் விமானம் தோராயமாக 10 ஆயிரம் அடி தூரத்தில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள விமானப்படையில் புயல் வேட்டையாளர்களாக 70 பேர் பணிபுரிகிறார்கள். பருவநிலையைக் கணிப்பதற்காக 70 ட்யூப் வடிவிலான கருவிகள் விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. நோவா எனும் புயல் வேட்டையர்கள் பயன்படுத்தும் விமானத்தில் 3 இஞ்சின்கள் உ