புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
ஹரிகேன் என்ற சொல்லின் மூலம் என்ன?
மாயன் இனக்குழுவின் கடவுளான ஹூராக்கன் என்பதிலிருந்து ஹரிக்கேன் என்ற சொல் உருவானது. இக்கடவுள் விடும் மூச்சுக்காற்றே அதிக ஆற்றல் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
1950ஆம் ஆண்டு தொடங்கி, சர்வதேச வானிலை அமைப்பு மூலம் கலந்துரையாடல் சந்திப்புகள் நடத்தப்பட்ட புதிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. இப்பெயர்களுக்கு கலாசாரம், நிலப்பரப்பு சார்ந்த தன்மை உண்டு. இவை, அட்லாண்டிக், கரீபிய, ஹவாய் பகுதியைச் சேர்ந்தவை. பருவக்கால புயல் மணிக்கு அறுபத்து மூன்று கி,மீ. வேகத்தைத் தாண்டினாலே அதற்கு தேசிய புயல் மையம், பெயர் சூட்டுவதற்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள். க்யூ, யு, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகளில் பெயர்கள் குறைவு என்பதால் இந்த எழுத்துகள் விலக்கப்படுகின்றன.
புயல்களின் பெயர்களை நீக்குவது உண்டா?
புயல்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஆறு ஆண்டுகள் ஆயுள் உண்டு பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்படுத்திய புயல்களின் பெயர்களை நாடுகள் விண்ணப்பம் செய்தால் சர்வதேச வானிலை அமைப்பு, நீக்கிவிடுகிறது. அதற்கு வேறு பெயர் சூட்டுகிறது.
ஒயிட்அவுட் என்றால் என்ன?
பனிப்பொழிவு காரணமாக சாலையை பார்க்க முடியாமல் போகும் நிலையை ஒயிட் அவுட் என்கிறார்கள். இப்படியான சூழலில், சாலையிலுள்ள பனியின் மீது கார்களின் வெளிச்சம் பட்டாலும், அந்த வெளிச்சம் பிரதிபலிக்கப்படும். இதனால், ஓட்டுநருக்கு சாலையைப் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். சூரிய ஒளி குறைவாக இருந்தாலும் நிலை இன்னும் மோசமாகவே இருக்கும். ஒளி பிரதிபலிப்பு கூடுதலாக இருக்கும்.
இடிமுழக்கம் எவ்வளவு தொலைவுக்கு கேட்கும்?
மின்னலோடு தோன்றுவதுதான் இடிமுழக்கம். பொதுவாக பதினொரு கி.மீ. தூரத்திற்கு கேட்கும். சில அசாதாரண சூழ்நிலையில், 32 கி.மீ. தூரத்திற்கு கேட்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இடியின் ஒலி அளவு 120 டெசிபலுக்கும் அதிகமாக இருக்கும்.
தட்பவெப்பம், காலநிலை என இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
தட்பவெப்பம் என்பது அப்போதையை சூழலை குறிப்பது. காலநிலை என்பது சற்று நீண்ட சூழலைக் குறிப்பது. குறிப்பிட்ட பகுதி, பிராந்தியத்தின் வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை தட்பவெப்பநிலை குறிக்கிறது. காலநிலை, பத்து ஆண்டு, முப்பது ஆண்டு அளவிலான சூழலை கணிக்க உதவுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக