பிரிவாற்றாமை பாடல்களில் பெருகி ஓடும் இயற்கை அழகு- அகநானூறு- நித்திலக்கோவை - நூறு பாடல்கள்

 

 

 

அகநானூறு - நித்திலக்கோவை
நூறு பாடல்கள்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
மதுரை இலக்கியத் திட்டம்

அகநானூறு பாடல்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில், நித்திலக்கோவை என்பது இறுதிப்பகுதி. இதில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன.

இப்பாடல்கள் அனைத்துமே தலைவன் பிரிவைப் பற்றி தலைவி பிரிவாற்றாமையோடு பேசுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைவி பாடலைப் பாடுகிறாள். அல்லது தோழி தலைவனால் தலைவி நோயுற்று வாடுவதைக் குறிப்பிடுகிறாள்.

தொன்மையான அழகிய தமிழ் சொற்களை வாசிக்கவேண்டுமெனில் அகநானூறு நமக்கு உறுதியாக உதவும். ஏராளமான அழகிய தமிழ்சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நக்கீரர், பரணர், இளவெயினியார், கபிலர் என பல்வேறு புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் பிரிவாற்றாமை பாடல்கள்தான். அத்தனையிலும் இயற்கை அழகு, வாழுமிடங்களின் செழுமை ஆகியவற்றைப் பாடிய பிறகு காதலை உரைக்கிறார்கள். பாடல்களில் காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் எப்படி அனைத்து உயிரினங்களுக்கும் இடமுண்டோ, அந்த வகையில் இப்பாடல்களில் மனிதர்களின் உணர்வுகள் மட்டுமல்ல விலங்குகள், அவற்றின் குணம், அதன் சிறப்பு என பல அம்சங்கள் உள்ளன. இப்பாடல்களை வாசிக்கும்போது ஏதாவது ஒரு புதிய விஷயத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

மதுரை இலக்கிய திட்டத்தின் வழியாக சங்க இலக்கியங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. நூல்களை நீங்கள் பிடிஎப்பாக மட்டுமல்ல ஹெச்டிஎம்எல் என்ற கோப்பு வழியாக கூட தரவிறக்கி வாசிக்க முடியும். இதுபோல தமிழை பரப்புவதற்கான முக்கிய பணியாக இன்னொன்றை கூறிவிட முடியாது. வடமொழி, நம்மை சூறையாட அதிவேகமாக முயன்று ஒரே நாடு ஒரு கலாசாரம் என்ற சூழலை எதிர்கொண்டு வருகிறோம். இந்த சூழலில் தமிழ்மொழி இலக்கியங்களை பயில்வதும், அவற்றை பிரசாரம் செய்வதும் அவசியம். வெற்றுப் பேச்சாக அல்லாமல் தமிழ்மொழி நூல்களை மக்கள் அதிகம் வாசிப்பதே தமிழுக்கான சிறந்த பரப்புரையாக அமையும்.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்