தேனீயின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் எரிச்சல், வீக்கத்திற்கான ஓமியோபதி மருந்து!

 

 





 

 4
மருந்து = நஞ்சு
ஓமியோபதி

அல்லியம் செபா என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்னர், ஓமியோபதி மருந்துகளை முறையாக மருத்துவரின் பரிந்துரைகளின்படி சாப்பிடவேண்டும். அல்லாதபோது, அதன் பக்கவிளைவுகளை ஒருவர் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஓமியோபதி மருத்துவரிடம் மருந்துகளை வாங்கினாலும் கூட, மருந்தின் ஆபத்தான பக்க விளைவுகளைப் பொறுத்து, அதை கூறும்படி தொலைபேசி எண்களை கொடுப்பதுண்டு. மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளுக்கு ஏற்ப மருத்துவர், மாற்று மருந்துகளை அல்லது அதை சமாளிக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்குவார். ஓமியோபதி மருந்துகள் சர்க்கரை, மதுவை சாரமாக கொண்டு பக்குவப்படுத்துதல் முறையைக் கொண்டவை. ஆனால் மருந்து என்பது என்பது மருந்துதான். அதை மறந்துவிடாதீர்கள்.

சிவப்பு வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் தாய் திராவகமே அல்லியம் செபா. பொதுவாக வெங்காயத்தை சளிக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.
பருவகாலங்களில் கடுமையான பூக்களின் நறுமணம் வீசும்போது, மகரந்தம் மூலம் ஒவ்வாமை உருவாகி தும்மல் கடுமையாக தொடரலாம். கூடவே கண், மூக்கில் நீர் வடியும். காய்ச்சலும் கூட லேசாக வரக்கூடும். தும்மல், கண், மூக்கில் நீர்வடிதல் தினசரி மாலை வேளையில் தீவிரமாக இருக்கும். அடுத்து, தொண்டை கட்டிக்கொள்ளும். இப்படியான சூழலில் அல்லியம் செபா தாய் திராவகத்தை மருத்துவர் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம்.

ஆன்டிமோனியம் தத்தாரிகம்

நிறமற்ற கிரிஸ்டல் வடிவம் அல்லது வெள்ளை பொடி போன்று இருக்கும் மருந்து. நோயாளிக்கு இருமல் வந்தால், மூச்சுவிட முடியாதபடி சிரமம் இருக்கிறது, குறிப்பாக, கோபம் வரும்போது இருமல் தவறாமல் வருகிறதா அப்போது ஆன்டிமோனியம் மருந்தை உட்கொள்ளலாம். முன்னர், குமட்டல் வருபவர்களுக்கு இம்மருந்தை கொடுத்தனர். வாந்தி வந்தும் கூட குமட்டல் வந்தால் ஐபெகாக் என்ற மருந்தைக் கொடுக்கலாம். ஆஸ்துமா, இருமல், வாந்தி , மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கு ஆன்டிமோனியம் உதவும். இருமி சளி அதிகம் வந்தால் ஐபெகாக், இருமல் மட்டும் என்றால் ஆன்டிமோனியம் என இரு மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

அபிஸ் மெலிட்டிஃபிகா

தேனீயில் இருந்து பெறப்படும் நச்சுதான் மருந்து. அபிஸ் உற்பத்திக்கு மூலம் தேனீயின் நஞ்சு. ஏதேனும் பூச்சி, வண்டு கடித்து தோலில் வீக்கம், எரிப்பு, எரிச்சல் உள்ளதா, கண்களில் நடிகர் சாய்குமார் போல அக்னி கொட்டுகிறதா, கண்ணீர் கூட கொதிக்கிறதா, சிறுநீர் கழிக்கும்போது கடைசி சொட்டு வெளியேறும்போது எரிச்சல் உண்டாகிறதா? ஓகே ரைட் இப்போது நீங்கள் அபிஸ் மருந்தை பயன்படுத்தலாம். சிலசமயங்களில் காய்ச்சல் ஏற்படும். ஆனால் தாகம் எடுக்காது. குளிர்பானங்களை குடிக்கும் எண்ணம் தோன்றும். கண்,தொண்டை, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அபிஸ் ஏற்றது. அறிகுறிகள் நிற்காமல் தீவிரமடைந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். பெல்லடோன்னா, ருஸ்டாக்ஸ், லேடும், செபியா என அடுத்தகட்ட மருந்துகளுக்கு செல்லக்கூடாது. அது ஆபத்து.

மூலம்
ஹோமியோபதி இன் தி ஹோம்

 குறிப்பு

முந்தைய பதிவில், விஷம்=நஞ்சு என தலைப்பு வைக்கப்பட்டது. அது தவறு. தலைப்பு திருத்தப்பட்டுவிட்டது. மருந்து = நஞ்சு என இருக்கவேண்டும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்