புத்தமதம் பற்றிய அடிப்படைக் கருத்துகளை உரை வடிவில் முன்வைக்கும் நூல்!
ஃபண்டமென்டல் ஆஃப் புத்திசம்
பீட்டர் சான்டினா
இ நூல்
இணையத்தில் புத்தமதம் தொடர்பான கோடிக்கணக்கான நூல்கள் இலவசமாக படிக்க கிடைக்கின்றன. அப்படி கிடைத்த நூல்களில் ஒன்று, இந்நூல்.
நூலில் மொத்தம் பதிமூன்று உரைகள் உள்ளன. அத்தனையும் புத்தமதம் சார்ந்து பீட்டர் சான்டினா ஆற்றியவை. இதில் புத்த மதம், அதன் அடிப்படை கோட்பாடுகள், கருத்துகள் பலவும் பேசப்படுகிறது.
எழுத்து வழியாக நிறைய கருத்துகளை விளக்க முயலவில்லை. ஏனெனில் இக்கருத்துகள் அனைத்தும் பேசப்பட்டவை. எனவே, புரிந்துகொள்வதற்கு ஏற்ற உதாரணங்களுடன் சற்று எளிமையாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்த நூலை படித்தாலே புத்த மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா என்றால் ஓரளவுக்கு என்றே பதில் கூறவேண்டும். எளிமையாக பேச்சு வழக்கில் மதம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளை கூறுகிறது. அந்த வகையில் இந்நூலை தொடக்க வாசிப்பிற்கான ஒன்றாக கருதலாம்.
136 பக்கங்களைக் கொண்ட எளிய நூல், வேகமாக வாசித்துவிட எண்ணுவீர்கள். ஆனால் மத நூல் என்பதால், அந்தளவு வேகமாக வாசித்து கடக்கமுடியாது. அந்தளவுக்கு முக்கியமான யோசித்து கடக்கவேண்டிய நிறைய சொற்கள் உள்ளன. துன்பம், மகிழ்ச்சி, மறுபிறவி, கர்மா என நிறைய அடிப்படைக் கருத்துகள் அதற்கான காரண காரியத்தோடு பேசப்பட்டுள்ளது. வாய்ப்பிருப்பவர்கள் வாசியுங்கள். நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக