தொழில்நுட்பத்தை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் எப்படி பயன்படுத்துகின்றன?

 

 


 

 

 

தொழில்நுட்பம் என்பது ஒருவரை குறிப்பிட்ட செயலை செய்யவைக்கிறது என்று கூற முடியாது. ஆனால் செய்யும் செயல்பாட்டை சற்று எளிமைபடுத்தி வேகமாக செய்யலாம். இணையம் வந்தபோது இந்தியாவின் வடக்குதேச தற்குறிகள், வெளிநாட்டினரின் நிர்வாண படங்களைக் கேட்டு சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தனர். ஆக, தொழில்நுட்பம் என்பது உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதை நீங்கள்தான் தாழ்ந்துபோகாமல் காக்கவேண்டும். இப்போது விமானச்சேவை விலை குறைவாக வந்துவிட்டதால், வடக்குதேச தற்குறிகள் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு பொது இடங்களில் அநாகரிகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். உலகநாடுகளில், இந்தியா என்ற நாட்டிற்கு பெரிய நல்லபெயர் கிடையாது என்பதால், வடக்குதேச தற்குறிகளின் செயல்களால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், நேர்மையாக படித்து சென்று அமைதியாக வேலை செய்பவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ஒன்றியத்தின் பெயரைக் கூறாமல் தெற்குதேசத்திலுள்ள மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள்.

தொழில்நுட்பம் என்பது உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் மனம் சரியான பாதையில் சென்றால், எந்த பிரச்னையுமில்லை. இல்லையென்றால் கையில் , காலில் சங்கிலி கட்டி விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுவீர்கள். பெரிய தொழில்நுட்பங்களிலும் சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. கூகுளின் ஏஐ தொழில்நுட்பங்களில் கூட இனவெறி சார்ந்த பிரச்னைகளை, பயனர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். காலத்திற்கு ஏற்ப, தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. மனிதர்களின் மனம் முன்னேறவில்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திலுள்ள சமூக அரசியல் நிலைகளுக்கு ஏற்பட தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படுவதும் உண்டு. போலிச்செய்திகளை, பொய்களை அரசே உற்பத்தி செய்து பரப்பும்போது, அதை சோதித்து மக்களுக்கு அறிவிக்கும் தொழில்நுட்பங்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால், ஒருகட்டத்தில் நிறவெறி, இனவெறி என கீழ்மையான எண்ணம் கொண்ட மனிதர் நாட்டின் தலைவராகும்போது, சமூக வலைதளங்கள் போலிச்செய்திகளை, பொய்களை இனமறியும் வசதிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.எதற்கு இப்படி கூறவேண்டும்? நாட்டின் புதிய தலைவருக்கு சோப்பு போட்டால்தானே, நடைமுறையில் சமூக வலைதள நிறுவனத்தை நடத்த முடியும்? இப்படியாக காலை நக்கிப் பிழைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் வெற்றி பெற்று தனது துறையில் முன்னேறும்போது, அந்த நிறுவனம் தரும் உதவித்தொகைகளை பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் பெறுகி்ன்றன. ஒருவகையில் தொழில்நிறுவனம் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட ஆராய்ச்சிகளையும் பணத்தைப் பெறும் அமைப்புகள் செய்கின்றன. அரசும் இப்படி பெரிய நிறுவனங்கள் பலவற்றைப் பயன்படுத்தி தனது அதிகாரம், செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறது.

ஏகபோக தொழில்நுட்பம் மக்கள், அகதிகள் மற்றும் போட்டி நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்கிறது. இதற்குத்தான் கைரேகை, கண்ரேகை, அடையாள அட்டை இணைப்பு, சிசிடிவி, குரல் செயல்பாட்டு உதவியாளர்கள், செயற்கை நுண்ணறிவு என நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் வாக்களிப்பதற்கு மட்டுமே ஆதாரை இணைக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் அதையும் செய்யச் சொல்லிவிடுவார்கள். ஒருகட்டத்தில் எதை, எதையோடு இணைக்கவேண்டும் என்று புரியாதநிலை ஏற்பட்டுவிடுகிறது.

சீனா வெளியிட்டுள்ள டீப் சீக் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு கேள்விக்கு பதில் சொல்வது என்பதில்லை. அது எப்படி யோசித்து பதில் சொல்கிறது என்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அதாவது, ஒரு கேள்வி கேட்டால், அந்தக்கேள்வி எதற்காக கேட்கப்படுகிறது, என்ன பதில் சொன்னால் சரியாக இருக்கும் என நாம் யோசிப்பதை டீப்சீக் அப்படியே மென்பொருளாக உருவாக்கி வென்றிருக்கிறார்கள். அறிவியல் அமைப்புகளுக்கு புகையிலை நிறுவனம் ஒன்று, நிதிநல்கையை வழங்குகிறது என்றால், புகையிலையால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று யாராவது ஆய்வு செய்ய முடியுமா, அப்படி செய்திருந்தால் அதை ஆய்விதழில் வெளியிடுவார்களா? சாத்தியமே கிடையாது அல்லவா?

சில சமயங்களில் அரசின் அமைச்சர்களாக இருப்பவர்கள், தொழில் நிறுவனங்களில் வழக்குரைஞராக, அதிகாரிகளாகவோ இருந்தார்கள் என்றால் அவர்கள் தங்களின் பணியில் மக்களுக்காக அவர்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவார்களா? வாய்ப்பு குறைவு. வலிமையான தொழில்நுட்பம் அதிகாரம் மிக்கோரின் ஆயுதமாக மாறுகிறது. எளிய மக்களை பாதிக்கிறது. இருப்புபாதை, எண்ணெய் சுத்திகரிப்பு, பணப்பயிர், மைக்ரோசிப், அணு உலை ஆகியவற்றை அரசு மேலதிகார படிநிலையில் நிர்வாகம் செய்கிறது. மேலே இருந்து ஒருவர் கூறுவதை கீழே உள்ளவர் எதிர்க்க முடியாது. அப்படித்தான் மேற்சொன்ன நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்படுகின்றன. இவை உள்நாட்டு உற்பத்தியில் பெரும்தாக்கம் ஏற்படுத்துபவை.  
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்