இடுகைகள்

சன்னா மரின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் தலைவர்களை நம்பாத நாட்டு மக்கள், ஒழுக்கத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள்- பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?

படம்
  சன்னா மரின் ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக அரங்கில் பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்? அண்மையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலியா நாட்டில் உரையாற்றினார். அதில், உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் ஜனநாயக பாதிப்புகளை பற்றி குறிப்பிட்டு பேசினார். ‘’உலக நாடுகளில் பரிசோதனை முறையாக இரண்டு ஆண்டுகள் பெண்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் உலகம் சரியான திசையில் செல்லத் தொடங்கும்’’ என்று பேசினார். அவரை நேர்காணல் கண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் அதற்கு பதிலாக “ஆறுமாதங்கள் போதும்” என்று கூறினார். பராக் ஒபாமா தனது மனதில் இருப்பதைக் கூறினாலும் அவர் கூறிய விஷயம் நடைபெறுவது மிகவுமதொலைதூரத்தில் இருக்கிறது. ஐ.நா சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், கடந்த இருபது ஆண்டுகளில்தான் பெண்கள் நாட்டின் அதிபர்களாக வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் நாட்டின் தலைவர்களாக உருவாகி வளரும் எண்ணிக்கையும் ஆண்களோடு ஒப்பிட்டால் குறைவாக உள்ளது. 2022ஆம் ஆண்டு பதினேழு பெண் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பனிரெண்டாக சுருங்கிவிட்டது. பாலின பாகுபாடு காரணமாக பெண்களுக்கு அரசியலி