இடுகைகள்

மார்செட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும்.  1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன.  காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.  1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ.  ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முட