இடுகைகள்

உ.பி. யோகி ஆதித்யநாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளம்பெண் கொல்லப்பட்டது சாதிரீதியான கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்! பிரசாந்த் குமார், ஏடிஜிபி, உ.பி

படம்
                வல்லுறவு நடக்கவில்லை! பிரசாந்த் குமார். ஏடிஜிபி, உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? செப்.14க்குப் பிறகு உளவுத்துறை தகவல்படி, சாதி மோதல்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறவிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வரும் மிரட்டல்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை பயன்படுத்தினோம். நாங்கள் பாதுகாப்பு வழங்காதபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தாலும் காவல்துறைதான் பொறுப்பு என்பார்கள். உள்ளூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமைதான். இறந்துபோன பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்திருக்கும் என்கிறீர்களா? இன்னும் வழக்கு பற்றிய முறையான விஷயங்களை பதிவு செய்யவில்லை. சிபிஐ விசாரணை எதற்கு? வழக்கு வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாக மாநில காவல்துறை, சிபிஐயோடு இணைந்து செயல்படவிருக்கிறது. சாதி மோதல்களை ஏற்படுத்த முனைந்த குழுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? இந்த சதியை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை செய்து வரு

தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

படம்
    சந்திரா பான் பிரசாத் சந்திரா பான் பிரசாத் சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர். ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அத