இடுகைகள்

மதம். ஜாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகள், மத, ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து வென்றிருக்கிறார்கள்! - சதேந்திரகுமார்

படம்
  சதேந்திர குமார் சமூகவியலாளர் இவர் ஜிபி பான்ட் சமூக அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இக்கழகம் அலகாபாத் பல்கலையின் ஓர் அங்கமாக உள்ளது.  வேளாண்மை சட்டங்கள் மூன்றுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. விவசாய அமைப்புகளின் போராட்டம் வெற்றி பெற என்ன காரணம்?  இந்த வெற்றிக்கு காரணம் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்தான். அமைப்பை நிர்வாகம் செய்த தலைவர்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு ஆகியவை முக்கியமான காரணம். நகரம் மட்டுமன்றி, கிராமப்புற  விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது முக்கியமானது. இந்த போராட்டத்தில் இளைஞர்களும் பெண்களும் பங்கெடுத்தனர். விவசாயிகள் போராட்டங்களில் இருந்தபோது, வீட்டிலுள்ள பிற குடும்ப உறுப்பினர்கள் நிலங்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். இதுதான் போராட்டத்தை பெரும் ஊக்கமாக எடுத்துச்செல்ல உதவியது. பல்வேறு குரல்கள் ஒலிக்கும்படியான தேசிய அளவிலான இயக்கமாக விவசாயிகளின்போராட்டம் மாறியது இதனால்தான்.  கொரோனா பெருந்தொற்று போராட்டத்தை பாதித்ததா? நகரங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள், பெருந்தொற்று காரணமாக வேலைகளை இழந்தனர். இவர்களுக்கும் வி