இடுகைகள்

ஹவாலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹவாலா குற்றவாளியை திக்கு முக்காடச் செய்யும் அப்பாவி கணக்காளன்! பால தந்தானா - தெலுங்கு

படம்
  பால தந்தானா - தெலுங்கு பால தந்தனா தெலுங்கு ஶ்ரீவிஷ்ணு, கேத்தரின் தெரசா தமிழில் போடு தந்தானா தமிழ்ப்படம் யூட்யூப் சேனல் ‘’கெட்டது செய்றவங்களை கேட்வி கேட்கறதில்ல. ஆனா, நல்லது பண்றவங்கள கேள்வி கேட்கிறோம். இதுல என்ன நியாயம் இருக்கு. அதனால, சந்து மும்பைல என்ன பண்ணிட்டிருந்தான்னு நா கேட்கல’’ என படத்தின் இறுதியில் சசிரேகா மனதுக்குள் நினைத்தபடி சந்துவின் பின்னாலே நடந்த்து   வெளியே வருகிறார். உண்மையில் இது சுவாரசியமான இறுதிக்காட்சி. இதை வைத்து ஸ்பின்ஆஃப் படம் ஒன்றை எடுக்காம். சந்து மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என … அதுவும் சுவாரசியமாகவே இருக்கும். தெலுங்கில பால தந்தானா, தமிழில் போடு தந்தானாவாகியிருக்கிறது. ஸ்லோபர்னர் படம். மெதுவாகத்தான் கதையில் என்ன நடந்திருக்கிறது என தெரிந்துகொள்கிறோம். அதுவரை, வெப்சைட் செய்தியாளரான சசிரேகா போலவேதான் நாமும் இருக்கிறோம். பிரபாநியூஸ்.காம் என வெப்சைட் ஒன்றில் செய்தியாளராக சசிரேகா வேலை செய்கிறார். இவருக்கு செய்தி என்றால், மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். அப்படி பாடுபட்டு எழுதும் செய்திகளால் நிறைய பிரச்னைகள, மிரட்டல்கள்

எப்படி கடத்தப்படுகிறது ஹவாலா தங்கம்!

படம்
கடத்தல் வாகனமாக மனித உடல் காசு கொடுத்து வாங்கும் பொருள் நாட்டையும் வீட்டையும் வளர்ப்பது உண்மைதான். ஆனால் வரிகொடுக்காமல் வரும் தங்கம்தான் இன்று நகைச்சந்தையை ஆட்சி செய்து வருகிறது. ஹவாலா முறையில் செயல்படும் உலகளாவிய வலைப்பின்னல் இதில் உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் கடத்தல் வலைப்பின்னல்களால் கடத்தப்படும் தங்கத்தின் சதவீதம் 46 என சுங்கத்துறை கணக்கு சொல்லியுள்ளது. கடந்த ஆண்டு 109 கிலோ தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 40 கோடி. இதனைக் கடத்திக் கொண்டு வருபவருக்கு நூறுகிராமுக்கு ரூ.350 தருகின்றனர். எனவே கிலோகிராமாக கடத்தினால்தான் நல்ல வரும்படி கிடைக்கும் என கடத்தி வருகின்றனர். வெளிநாட்டு தங்கத்திற்கு 38.5 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. இதனால், கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் லாபம், 15 லட்சம் ரூபாய். இதில் சுங்கத்துறையிடம் ஆட்கள் சிக்கிக்கொண்டாலும் லாபம் கிடைக்கும் பாதுகாப்பான வியாபாரத்தை இந்த கள்ளக்கடத்தல் குழு செய்துகொள்கிறது. தங்கத்தை கடத்தும் ஆட்கள் அனைவரிடமும் 600 கிராம் தங்கத்திற்கு குறைவான அளவே வழங்கப்படுகிறது. பெரும்பாலும் தங்கத்தை கடத்துபவருடன் சக பயணியாகவ