இடுகைகள்

கௌபாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடுகளை எரித்த கான்சாஸ் கொடூரன் - லயன்காமிக்ஸ் என்பிஎஸ் ஸ்பெஷல்!

படம்
பிளேடுபீடியா கேப்டன் டைகரின் கான்சாஸ் கொடூரன் லயன் காமிக்ஸ் - என்பிஎஸ் விலை 400 பதினெட்டாம் நூற்றாண்டுக்கதை. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அப்போது, அரசுப்படையைச் சேர்ந்த கொடூரன் லேன் தலைமையேற்று புரட்சிப்படையை ஒடுக்குகிறார். அதேசமயம் இவருக்கு வில்லனாக பில் குவான்ட்ரில் என்ற மற்றொரு மூர்க்கன் உருவாகிறான். இவர்களை எப்படி கேப்டன் டைகர் சமாளித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை. ஊரை இம்முறை டைகரால் காப்பாற்ற முடியவில்லை. காரணம் உயிர் தப்பியதே தம்புரான் புண்ணியம் என்ற நிலை. இந்தக் கதையில் டைகருக்கு எந்த ஆக்சனும் இல்லை. பெரும்பாலான நேரங்கள் கைதியாகவே இருக்கிறார். இதனால் கதையில் சுவாரசியம் கெடவில்லை என்பதுதான் முக்கியம். டைகர் லேனை காப்பாற்றினாலும் அவன் தன் நயவஞ்சக புத்தியை கைவிடவில்லை. இறுதியில் டைகரை உயிரோடு எரிக்க பில் குவான்ட்ரில் பிளான் செய்கிறான். அதிலிருந்து டைகர் தப்பினாரா, லேன் அவருக்கு உதவினாரா என்பதுதான் கிளைமேக்ஸ். கதை நடக்கும் இடம் முழுக்க பரபரப்பு உள்ளது. ஆனால் டைகர் எந்த செயல்பாட்டையும் செய்யாமலேயே இதெல்லாம் நடப்பது எ

போதைக்கம்பள கும்பலை அழிக்கும் சிக்பில் அண்ட் கோ! - ஜாலி காமிக்ஸ்

படம்
பிளேட்பீடியா சிக்பில் மற்றும் குள்ளன் கலக்கும்  கம்பளத்தில் கலாட்டா லயன் காமிக்ஸ் - 40ஆவது ஆண்டு மலர்!  சிக்பில் அண்ட் கோ, இம்முறை வித்தியாசமான வழக்கை தீர்க்கின்றர். சீரியசாக அல்ல ஜாலியாகத்தான். போதைப்பொருட்களை விற்பவர்கள் செவ்விந்தியர்களை மதுபானங்களை வாங்கச்செல்லி கெஞ்சுகிறார்கள். பின்னர் மிரட்டுகிறார்கள். ஆனால் சிக்பில் சாம, பேத, தண்ட முறையில் அதனை சமாளிக்கிறான். ஆனால் அவர்கள் அதற்கு அஞ்சாமல் ஊருக்குள் வந்துவிடுகின்றனர். அங்குள்ள சீனா பஜார் போல பொருட்களை விற்கும் முஸ்தபாவை மிரட்டி தங்களின் போர்வையை விற்க வற்புறுத்துகின்றனர். இல்லையெனில் கடையை எரிக்கவும் அவர்கள் தயங்க மாட்டோம் என எச்சரிக்கின்றனர். அந்தப் போர்வையை பயன்படுத்திய ஷெரீப்பின் கையாள், அதிலுள்ள போதைப்பொருளால் மயங்கி புத்தி கலங்குகிறது. இதனைக் கண்டறிய சிக்பில் அண்ட் கோ, கோழையாக ஷெரீப்பின் பின்னால் அணிதிரள நடக்கும் காமெடி சரவெடிகள்தான் கதை.  இதில் அதிரடி சண்டைகளை எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அனைத்தும் காமெடிதான். இதனால் சீரியசான போதைப்பொருள் சங்கதி கூட அப்படியா என்றுதான் கேட்க வைக்கிறது. ப

மனதில் உறுதி வேண்டும்! - ட்யுராங்கோ அதிரடிக்கிறார்!

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ அதிரடிக்கும் மனதில் உறுதி வேண்டும் - அத்தியாயம் 2 வ்யோமிங் பகுதியில் கொள்ளை கும்பலைப் புரட்டி எடுக்கும் நொண்டி நாயகன் ட்யுராங்கோவின் கதைதான் இது. முதல் அத்தியாயத்தில் துப்பாக்கித் தோட்டாக்களால் காயமுற்றவர், தானாக குதிரையில் ஏறி பயணிக்கிறார். அவரை கிழவர் ஒருவர் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்து உதவுகிறார். ஆனால் அதையும் அருகிலுள்ள ஃபீஸ்புல் சர்ச் ஊரிலுள்ள மக்கள் தவறு என்று கூறி தடுக்கின்றனர். அப்போது அங்கு கல்லஹன் எனும் குழு, வ்யோமிங் வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்து அடைக்கலமாகிறது. அந்தக்குழுவினரிலுள்ள ஸ்காட் என்பவன் பெண்ணிடம் தவறாக நடக்க கொலை செய்யப்படுகிறான். இந்த கொலை காரணமாக கொலைவெறி ஆகும் கல்லஹன் அந்த ஊர்க்காரர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பாதிரியாரை தூக்கிலிட்டு சுட்டுக்கொல்கிறார். அவரின் மற்றொரு கூட்டத்தை ட்யுராங்கோ கொன்று விட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த கிழவரைக் கொன்றதுதான் காரணம். இதற்குப்பிறகு அவர் ஃபீஸ்புல் சர்ச் ஊருக்குச் செல்கிறார்.  அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினார்களா இல்லையா என்பதுதான

மௌனப் புயல் ட்யுராங்கோ - ரௌத்திரம் பழகு அத்தியாயம் 1

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ கலக்கும் ரௌத்திரம் பழகு! கதையில் நீதி, நேர்மை இத்யாதிகளுக்கு இடமில்லை. ட்யுராங்கோ காசுக்கு கொலைகளை செய்யும் மௌன எமன். பேசுவது குறைவு. ரத்தப்பொத்தல் விழுந்த கையுடன் பத்து பேர்களை போட்டுத்தள்ளும் மனதிடம், உடல்பலம் கொண்டவன். தன் குடும்பத்திடமிருந்து விலகிப்போய் துப்பாக்கியும் தோட்டாக்களுமாக் வாழ்பவனை கடிதம் ஒன்று அமெரிக்காவின் பண்ணைக்கு வரவைக்கிறது. அங்கு வசிக்கும் ஹாரி லாங் என்ற அவரின் சகோதரர், அவனுக்கு பணம் தருவதாக கூறி அங்கு வரச்சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் ட்யுராங்கோ அங்கு வரும்போது காரியம் மிஞ்சியிருக்கிறது. செனட்டர் ஹ்யூலெட் தன் பண்ணையை விரிவாக்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். தனக்கு போட்டியாக கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளுகிறார். லாரியும் அப்படி கூலிப்படையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் தோள், வயிறு, கை என பல்வேறு தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கும்போதுதான் ட்யுராங்கோவுக்கு தெரிகிறது. பின் எப்படி எதிரிகளை வீழ்த்தி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

சூதாடி டைகரின் சோம்பலான காமிக்ஸ்! - என் பெயர் டைகர்!

படம்
என் பெயர் டைகர் லயன் காமிக்ஸ் ஜீன் கிராட் ரூ.250 1881 ஆம் ஆண்டு நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டைகர் காமிக்ஸ். இதில் டைகர் பெரும்பாலும் எந்த சண்டைகளிலும் ஈடுபடவில்லை. மொத்த விஷயங்களையும் செய்வது, அபாச்சே ஜெரோனிமா, பிடாரி மா க்ளண்டன், ஸ்ட்ராபீல்டு ஆகிய துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் டைகரின் கதை எழுதவரும் கேம்ப்பெல் கூட இருவரைக் கொல்கிறார் என்றால் பாருங்களேன். காமிக்ஸ் படிக்கும்போது, டி.ஆர் படம்போல ஜூனியர் கேரக்டர் எல்லாம் பன்ச் பேசுதே என எண்ணுவீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என நினைத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். இதில் பின் யார்தான் நாயகர் என்கிறீர்களா? ஏர்ப் சகோதர ர்கள்தான். டூம்ப்ஸ்டோன் நகர மார்ஷல்களுக்கும், க்ளண்டன் மற்றும் மெக்லெரி குழுக்களுக்கும் நடக்கும் உள்முக, மறைமுக பழிவாங்கல்தான் கதை. இதில் டைகர் தன் காதலியும் பாடகியுமான டோரிக்காக சீட்டுக்கட்டை கடாசிவிட்டு உள்ளே வருகிறார். வில்லன்களை காயம்பட்டாலும் போட்டுத்தள்ளி இறுதியில் சீட்டு விளையாடுகிறார். முக்கியமான பகுதி, கேம்ப்பெல்லுக்கு சொல்லும் தனது வாழ்வு குறித்த பகுதிகள்தான். செவ்வ