இடுகைகள்

அமரத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்! அல்டிமேட் நோட் சீன டிராமா 34 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் 1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.  தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக் கொல்லும் வெறி

மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

படம்
  அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் டிஸ்கவரி பப்ளிகேஷன் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன? இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது. நிகழ்