இடுகைகள்

கோட்டயம் புஷ்பநாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி

படம்
சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் விலை - 65 சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை. முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை. காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது. ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில்

நிழல் இல்லாத பைசாசிகம்! - கோட்டயம் புஷ்பநாத்

படம்
நிழல் இல்லாத மனிதன் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் -  சிவன் கேரளத்திலுள்ள பிரபலமான மருத்துவமனை சிட்டி ஹாஸ்பிடல்ஸ். இதன் உரிமையாளருக்கு காசும் தேவை அதோடு அதன் மூலம் நிறைய புகழும் தேவை. இதற்காக மருத்துவச்சேவை செய்துவருகிறார். கூட்டம் அள்ளுகிறது.  கூடுதலாக இதய மாற்று மருத்துவம் சார்ந்த படிப்புக்கு லூயிஸ் என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். இவருக்கு தன் பெண நான்சியைக் கட்டிக்கொடுத்து தன் சொத்தையும் மருத்துவத் தொழிலையும் நடத்தும் எண்ணம் அவருக்கு.  அப்போதுவரை மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஸ்டீபன். அவருக்கும் ஷைனி என்ற நர்ஸ் ஒருவருக்கும் கசமுசா என மருத்துவமனை கிசுகிசுக்கும் அளவு நெருக்கம் செல்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் வேலை போய்விடும். மருத்துவமனை உரிமையாளர் நர்ஸ்களை அழகு என்ற காரணத்தை வைத்து மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்.  கல்யாணம் செய்தால் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள் என்பதால், ஆன்டிகளுக்கு அங்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஜோடிகள் என்ன செய்வது என்றபோதுதான் லூயிஸ் உள்ளே நுழைகிறார். லூயிஸ் உள்ளே நுழைந்த பிறகு, அங்கு நடக்கும் ஆபத

சிவன் ஆடும் தாண்டவம்! - கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்!

படம்
தாண்டவம் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் ஹரி கிருஷ்ணன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அப்பா காசிக்கு போகும்முன்பு கொடுத்த ஓலைச்சுவடிகளை வாசிக்கிறான். அதில் எழிமலைக்காவு கோவில் பற்றி தகவல்கள் இருக்கின்றன. அங்கு போகவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது. அந்த ஊருக்குச் சென்றால் தங்குமிடம் கறையான்கள் அரித்துக் கிடக்கிறது. அங்கு சென்று மோகினிகளோடு சேர்ந்து துர் மந்திரவாதிகளோடு போரிட்டு தேவியை வெளியே கொண்டு வருவதுதான். கதை. ஸ்பெஷல் என்ன? கோபிகா, ஸ்ரீதேவிக்குட்டி, நாகவதி, விஷ்ணுப்பிரியா ஆகியோர்தான் ஹரி கிருஷ்ணனின் இன்ஸ்டன்ட் காதலிகள். இதில் நாகவதிக்கு இடம் அதிகம். நாகவதியும் பெண் கிடையாது என்பது ட்விஸ்ட். புஷ்பநாத் பொதுவாக சர்ச், லூசிபர் என்றால் கதையை மேலே நகர்த்த தடுமாறுகிறார். ஆனால் தறவாடு, கோவிலகம், பகவதி என்றால் கையில் கூடுதல் பலம் வருகிறது. மோகினிகள், பைசாச சக்திகள், கருடன், யட்சினி, தேவி ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி பரவசத்தைத் தருகிறார். இதில் ஹரிக்கு வில்லன்கள் அதிகம். அதேசமயம் ஹரி தன் செய்யும் உதவிக்கு பரிகாரமாக மோகினிகளின் பாலைப்பூ, தாமரைப்பூ

மாந்த்ரீகனுக்கு எதிராக காதல் மந்திரம் - கோட்டயம் புஷ்பநாத்தின் சூப்பர் நாவல்!

படம்
புத்தக விமர்சனம் காதல் மந்திரம் கோட்டயம் புஷ்பநாத்! தமிழில்: சிவன் உதயநல்லூர் என்ற ஊரில் நடக்கும் மாந்த்ரீகச்சண்டை. அங்கு அரண்மனையில் வாழும் கார்த்தியாயினி எனும் இளவரசிக்கும், பிரம்ம தத்தன் என்ற நம்பூதிரி வம்சத்திற்கு பழங்கால பகை உள்ளது. இளவரசி முந்நூறு ஆண்டுகளாக பிரம்ம தத்தனை பழிவாங்கி தேவியின் கையிலுள்ள ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நினைக்கிறாள். பிரம்ம த த்தனுக்கும் அதே ஆசைதான். ஆனால் அது நிறைவேறுவதற்கான வழி இளவரசிக்கு தெரியவில்லை. ஆனால் பிரம்ம த த்தன், இளம்பெண்களை பலியிட்டு அந்த வழியை சென்றடை முயற்சிக்கிறார். ஊரில் இருக்கும் பெண்களை பலாத்கார வல்லுறவு செய்து கொன்று துர்சக்திகளுக்கு பலியிடுகிறார். நாற்பது பெண்களை பலியிட்டால் நான் வில்லாதி வில்லன், மகா மாந்த்ரீகன் என கொக்கரிக்கிறார் பிரம்ம த த்தன். அவருக்கு தன்னார்வமாக வந்து உன்னைக் கொல்வேன் என்கிறார் கேசவன் குட்டி. ராகவன் குறுப்பு என்பவரின் மருமகன். நகரத்தில் படித்தவன். ஆச்சா? இனி கதையை நான் சொல்ல வேண்டுமா? அதேதான். பிரம்ம த த்தனின் மருமகளை கர்ப்பவதியாக்கி பிரம்ம த த்தனை கூண்டோடு பொலி போட்டு, தேவியிடம் ஆசிர்வாதம் வாங

அதிரவைக்கும் பழிக்குப்பழி - இது கோட்டயம் புஷ்பநாத் கோட்டா!

படம்
பிரம்ம ரட்சஸ் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் திருமகள் புத்தக நிலையம் தறவாட்டில் வாழும் ராஜ வம்ச பெண் கார்த்திகா அந்தர்ஜனம். அங்கு பணியாற்றும் வாசுதேவன் தம்பி, அவளை திருமணம் செய்வதாக கூறி சொத்துக்களை ஏமாற்றப் பார்க்கிறான். அதனை தேவி கார்த்திகாவிடம் கூறிவிட, அவள் அவனை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாள். ஆனால் வாசுதேவன் தன் நண்பர்களுடன் எழுமாற்றூர் அரண்மனைக்குச் சென்று அவளை பலாத்காரம் செய்து கொல்கிறான். அவளது உடலை குளத்தில் மிதக்கவிடுகின்றனர். ஊரே வாசுதேவனின் செல்வாக்குக்கு முன்பு ஒன்றும் செய்யமுடியாமல் பதுங்குகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? வாசுதேவன் நல்ல வரும்படியான இடத்தில் கல்யாணம் முடிக்கிறார். அதற்காக காத்திருந்த கார்த்திகா, பிரம்ம ரட்சஸாக எழுந்து வாசுதேவனை பழிவாங்க புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுகிறார். அவர் ஆடும் ரிவென்ஞ் ஆட்டம்தான் பிரம்ம ரட்சஸ். காதல், துரோகம், பேராசை, நிரம்ப காமம் என அனைத்துமே இதில் உண்டு. தன் பழிக்குப்பழி வாங்குவதற்கு திருமேனி ஒருவர் தேவை என கார்த்திகா உணரும்போது அங்கு மாந்த்ரீகம் கற்க வருகிறார் விஜயதேவன். முதலில்

அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்

படம்
தேவமோகினி கோட்டயம் புஷ்பநாத் தமிழில் சிவன் கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது. சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவ