மக்கள் அதிகார அமைப்புகளில் அரசியல் வன்முறைக்கான இடம்!
அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மையப்பொருளில், அடக்குமுறையைப் பற்றி பேசிவிட்டோம். ஆனால் அதற்கு பதிலடியாக மக்கள் அதிகாரத்துவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இன்னும் பேசவில்லை அல்லவா? அதைப்பற்றி இனி பேசுவோம். இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாகவே போராட்டம் நடக்கிறது. அதில், சில தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தும் போயிருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க,போராட்டக்காரர்களை இழிவுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்கிறது. காவல்துறையை ஏவி விவசாயிகளை அடித்து உதைக்கிறது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசுகிறது. சாலையில் வாகனங்கள் வராமல் இருக்க ஆணிகளை பதிக்கிறது. வேலைகளை அமைக்கிறது. இத்தனைக்கும் விவசாயிகள் போராட்டம், சீனாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் போன்ற கொரில்லா தாக்குதல் முறைகளைக் கொண்டதல்ல. அகிம்சை போராட்டத்திற்கு இத்தனை எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்குமுறைகள். இப்படி அடிபட்டு, உதைபடும் விவசாயிகள் அனைவரும் பொறுமையாக இருப்பார்கள் என நம்ப முடியுமா? காவல்துறை நவீன ஆயுதங்களை வைத்திருக்கலாம். ரஷ்ய, அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு ஆயுதங்கள் அவர்களுக்க...