இடுகைகள்

இந்தியா!-வறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமையில் முந்தும் மாநிலம் எது?

படம்
வறுமைப்பட்டியலில் இந்தியா ! உலகில் வளர்ந்து வரும் 102 நாடுகளில் வறுமை அளவில் இந்தியா 26 வது இடம் பெற்றுள்ளது . 2005-2016 காலகட்டத்தில் இந்தியாவின் வறுமை அளவு 55%-21% குறைந்துள்ளது . வறுமை அளவை கல்வி , சுகாதாரம் , வாழும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு India’s Multidimensional Poverty (MDP) எனும் வறுமை கணக்கீடு தயாரிக்கப்படுகிறது . கேரளா (1%), தமிழ்நாடு (6%), கர்நாடகா (11%), தெலுங்கானா (14%), ஆ்ந்திரா (13%) என வறுமை விகிதம் குறைந்துள்ளது . இந்தியாவின் தேசிய சராசரி 21% என்றால் அதில் தென்னிந்தியாவின் பங்கு 9% ஆக உள்ளது . வட இந்தியாவில் ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் , அசாம் , உத்தரப்பிரதேசம் , ஜார்க்கண்ட் ஆகிய வறிய மாநிலங்களில் பீகார் வறுமை விகிதத்தில் (43%) பெற்று முன்னிலை வகிக்கிறது . இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் வறுமையான சூழலில் இன்னும் தவித்து வருகின்றன என எம்டிபி அறிக்கை தகவல் சுட்டிக்காட்டுகிறது .