இடுகைகள்

கள்ளச்சாராய பலிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருகிவரும் கள்ளச்சாராய இறப்புகள்! - நத்தை வேகத்தில் நடக்கும் விசாரணை! - டேட்டா கார்னர்

படம்
              மக்களை பலிகொள்ளும் கள்ளச்சாராய தயாரிப்பு! - தற்சார்பு இந்தியா  அண்மையில் பஞ்சாபில் கள்ளச்சாரய பாதிப்பில் நிறைய பேர் பலியானார்கள் . உண்மையில் அரசின் மதுபானச்சாலை வருமானத்தின் அளவு கள்ளச்சாரயமும் பல்வேறு மாநிலங்களில் புழங்கி வருகிறது . அரசுக்கு தெரியாமல் இவை நடப்பதில்லை . அப்படி காட்டிக்கொள்வார்கள் . அவரவர்களுக்கான பங்கை கொடுத்துவிட்டால் பூசல் ஏது , சண்டை எதற்கு ? கொண்டாட்டம்தானே ? இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் கள்ளச்சாராயம் மூலம் மட்டும் 800 பேர்களுக்கும் மேல் பலியாகியிருக்கிறார்கள் . எதற்கு இந்த தொழிலை செய்கிறார்கள் ? குறைந்த முதலீட்டில் நினைத்துப் பார்க்கமுடியாத லாபம் கிடைக்கிறது . பெரும்பாலும் உள்ளூரில் வலுவான அரசியல் பின்னணி கொண்டவர்கள் தங்களின் பகுதிநேரத் தொழிலாக கள்ளச்சாராயம் விற்பதைக் கொண்டிருக்கிறார்கள் . பஞ்சாபில் கள்ளச்சாராய சாவுகள் தொடங்கிய தேதி ஜூலை 29, 2020. முதலில் சாராயம் குடித்த ஐந்து பேர் கைலாசம் சென்று சேர்ந்தனர் . இவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முச்சல் , தங்கரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் . அடுத்த இரண்டு நாட்களில் பலியா