இடுகைகள்

தேஜா வூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

படம்
  லெதோலாஜிகா (Lethologica) நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  தேஜா வூ (Deja Vu)  தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்...

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள...

தேஜா வூ ஏற்படுவது ஏன்?

படம்
Youtube ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி தேஜா வூ ஏற்படுவது ஏன்? தேஜா வூ என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்னமே பார்த்த என்று பொருள். நம்பில் பலருக்கும் தேஜா வூ பழகியிருக்கலாம். ஒரு சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அதனை முன்னமே சந்தித்தது போன்று இருக்கும். அதுதான் தேஜா வூ. 2004 ஆம் ஆண்டு செய்த தேஜாவூ ஆராய்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர் இதில் மூன்றில் இருபங்கினருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல; கண்பார்வையற்றவர்களுக்கும் கூட தேஜாவூவை உணர முடிந்திருக்கிறது. கனவுகளைப் போல தேஜா வூவை ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. தேஜா வூ நிகழ்வுகளை உங்களைக் குறித்த நினைவில்லாத நிலையில் பார்க்கிறீர்கள். அதுவும் பின்னர் மறந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட முன்னரே பார்த்த நிகழ்வுகள் திரும்ப நடக்கும்போது அவை நினைவுக்கு வருகிறது. இதில் முக்கியமான ஒற்றுமை, நீங்கள் பார்க்கும் அறைகளில் ஏதோவொரு விஷயம் நீங்கள் பார்த்த அறைகளோடு பொருந்திப்போகும். இதனால்தான் தேஜாவூவில் நீங்கள் பார்த்த  நண்பரின் அறை அவ்வளவு துல்லியமாக உள்ளது. அதேசமயம் நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறை...