இடுகைகள்

மனித வளக்குறியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித வளக்குறியீட்டெண்டில் இந்தியாவுக்கு 129வது இடம்!

படம்
giphy நூற்றி எண்பத்தைந்து நாடுகளைக் கொண்ட மனித வளக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129 வது இடத்தைப் பிடித்துள்ளது.  போனமுறையை விட இம்முறை ஒரு இடம் முன்னேறி உள்ளது. மனித வளக்குறியீடு என்பது ஒருவரின் தனிமனித வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இதனை ஐ.நா அமைப்பு பட்டியலிட்டு வெளியிடுகிறது. தொண்ணூறுகளிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் வாழ்நாள் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களின் அளவு 3.5 ஆண்டுகளாக கூடியுள்ளது. தனிநபர் வருமானம் 250 சதவீதம் அளவாக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மனிதவளக் குறியீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், ஜன்தன்யோஜனா ஆகிய திட்டங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2005 லிருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். உலகில் வறுமையில் உள்ளவர்களின் அளவில் இது 28 சதவீதம் ஆகும். மேலும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவு உயரவில்லை. 24 சதவீதமாக உள்ளது. தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பார்டர் மார்க