விரில் என்ற அற்புத சக்தியூட்டும் ஆதாரம்- மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி விரில் என்றால் என்ன? எழுத்தாளர் எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் எழுதிய நாவலில் இடம்பெற்ற மர்ம ஆற்றல் ஆதாரத்தின் பெயர்தான் விரில். தி கமிங் ரேஸ் என்ற நாவலில் சூழலில் உள்ள மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி வலிமையான ஆயுதம் ஒன்றை தயாரிக்க நினைப்பார்கள். அப்படியான மர்ம ஆற்றல் ஆதாரமே விரில். இப்படி எழுதிய எழுத்தின் பின்னால் எந்த அறிவியலும் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் கற்பனையை வைத்து நிறைய வேதிப்பொருட்களை இஷ்டப்படி கலந்து தயாரித்து சந்தையில் விற்றார்கள். அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. இப்போதைக்கு சந்தையில் போவ்ரில் என்ற பொருள் சந்தையில் கிடைக்கிறது. இறைச்சியிலிருந்து பெறப்படும் பொருள் இது. 1870ஆம் ஆண்டு தொடங்கி போவ்ரில் விற்பனையாகி வருகிறது. தொடக்க காலத்தில் இதன் பெயர் ஜான்ஸ்டன் ஃப்ளூய்ட் பீஃப். குழம்பில் வாசனைக்காக சேர்த்தனர். வெந்நீரைக் கலந்து சூடான பானமாக குடித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பயன்பாடு கொண்ட இறைச்சி உணவு போவ்ரில். வார்டென் கிளிப் என்றால் என்ன? நிக்கோலா டெஸ்லா, வார்டென் கிளிப் என்ற இ...