இடுகைகள்

சமஸ்கிருதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்