இடுகைகள்

சிங்கப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து இன மக்களையும் இணைத்து பொருளாதார ஏணியில் ஏற்றிய மாமனிதர் ! லீ குவான் யூ - எஸ்.எல்.வி மூர்த்தி

படம்
                            லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி எஸ் . எல் . வி மூர்த்தி கிழக்கு தீவு நகரமான சிங்கப்பூர் எப்படி பல்வேறு இன , மத தகராறுகளை சமாளித்து பொருளாதார வளர்ச்சி பெற்றது என விவரிக்கிறது இந்த நூல் . சிறு நகரம்தானே என பலரு்ம் நினைத்தாலும் நாட்டில் ஒழுங்கை எப்படி லீ ஏற்படுத்தினார் என்பது நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்றே கூறவேண்டும் . 1819 இல் உருவான சிங்கப்பூர் ராபிள்ஸ் என்ற ஆங்கில அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது . அவரைப் பற்றிய தகவலும் , நகரைப் பற்றிய தொலைநோக்கு கொண்டவரை அரசியல் சதிகளால் எ்ப்படி வீழ்த்தினார்கள் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது . இன்று சிங்கப்பூரில் ராபிள்ஸ் உரு்வாக்கிய பல்வேறு கல்வி , கலாசார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது சிங்கப்பூர் மக்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது என்ற தகவல் மட்டுமே ஆறுதலாக உள்ளது . சிங்கப்பூர் வரலாற்றில் ராபிள்ஸூக்கு பிறகு அதேபோன்ற இடத்திற்கு வருபவர்தான் லீ . சீனராக இருந்தாலும் கூட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் தொடக்கத்திலேயே இருந்தது அ

சிங்கப்பூரை முதலீட்டாளர்கள் தேடி ஓடுவது ஏன்?

படம்
          சிங்கப்பூரை தேடி ஓடும் பணக்காரர்கள் ! கிரேஸி ரிச் ஆசியன்ஸ் படம் வந்ததில் இருந்து பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய ஆசை வேர்விடத்தொடங்கிவிட்டது . ஏற்கெனவே சிங்கப்பூர் வேலைகளுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் புகழ்பெற்றது . இப்போது உலகிலுள்ள பல்வேறு பணக்காரர்களும் கூட தங்களது கடைகளையும் , வீடுகளையும் சிங்கப்பூரில் உருவாக்கிக்கொள்ள பரபரக்கிறார்ளள் . அதற்கேற்ப நிலத்தையும் வாங்கிப்போட்டு வருகிறார்கள் . பிற நாடுகளை விட சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் எளிதாக சென்று செட்டிலாக முடியும் . அங்கு அதற்கான உலகளவிலான முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர் . அந்த நாட்டில் 13.8 கோடி ரூபாய் வரையில் யார் முதலீடு செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு பாஸ்ட் டிராக் முறையில் குடியிருப்பதற்கான உரிமைகளை வழங்கி வருகிறது . குறிப்பிட்டளவு சொத்துகள் அதாவது ஆயிரம் கோடிக்கும் மேல் இருந்தாலும் அரசின் சலுகைகள் உங்களுக்கு மழையாக பொழியும் . ஹாங்காங் , இப்போது சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றிய நாடா , தனி நாடா என்று தவித்துக்கொண்டிருக்கிறது . எனவே இந்த நேரத்தில் அங்கு சென்று முதலீடுகளை செய்யவும

அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது

படம்
  cc   அடுக்கு மாடியில் விவசாயம் ! இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது . ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர் . சிங்கப்பூரில் பள்ளிகள் , வணிக வளாகங்கள் , வாகன நிறுத்தங்கள் , பன்னடுக்கு வளாகங்கள் , குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர் . ” இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ . நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ . இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில் , அதாவது , 720 சதுர கி . மீ . பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நாடு , தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது . 2030 க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம் . 2014 ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன . நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது . தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல்

சிங்கப்பூர் - 70 ஆண்டு சாதனை

படம்
Women's News Agency காவல்துறையில் பெண்கள் - 70 ஆண்டு சாதனை சிங்கப்பூர் காவல்துறை மிகச்சிறப்பான சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது. ஆம். இங்கு பெண்கள் பணியாற்றத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. நூர் ஹஃபிஸா ஹருன், வேகமாக காரில் வந்தவரை தடுத்து நிறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்வி, பெண் ஆஃபீசரா என்பதுதான். ஏன் பெண் ஆஃபீசர் பைக்கில் ட்ராஃபிக் போலீஸ் வேலை பார்க்க கூடாதா?  என்ற ஹருன், அபராதத்தை எழுத தொடங்கினார். ஆச்சரியம்தான். இருபத்தெட்டு வயதில் ஹருன் ஸ்டாஃப் செர்ஜென்டாக உள்ளார்.  இதுபோல பெண் ஆஃபீசரா என்ற கேள்விகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.  ஏன் பெண்கள் பைக் ஓட்டக்கூடாதா, முடியாதா? முடியாது என்றால் அது பொய். ஆண்களைப் போலவே நாங்களும் பயிற்சி பெற்று பைக் ஓட்டுகிறோம் என்கிறார். சிங்கப்பூர் காவல்துறையில் 19 சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 1,800 பேர்.  பெண்களை காவல்துறையில் பணி அமர்த்துவது என்பது தொடங்கிய ஆண்டு 1949. பரிசோதனை முயற்சிதான். ஆனால் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. மக்களிடையே அவ்வளவு புரிந்துணர்வு இல்லையென்றாலும் அரசு பெண்களுக்கு கொட