இடுகைகள்

ஹோன்ஜாக் கலாசாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிக்கும் வாழ்க்கை - சியர்ஸ் ஹோன்ஜாக் சொல்லுங்க!

படம்
சியர்ஸ் ஹோன்ஜாக்  தனிமையில் தவிப்பது எல்லாம் இனி பழங்கதை. தனியாக சமைத்து வேலைக்கு போய் விடுமுறையையும் ஜாலியாக திட்டமிட்டு வாழும் பழக்கம் உலகெங்கும் வைரலாக பரவிவருகிறது. தென்கொரியாவில் இப்படி வாழ்பவர்களுக்கு கடந்தாண்டு ஹோன்ஜோக்(Honjok) என பெயரே சூட்டிவிட்டார்கள். தனியாக வாழ்வதற்கு என்ன காரணம்? குடும்பம் கொடுக்கும் எக்கச்சக்க பொறுப்புகளும், சுமைகளும் அதனை சமாளிக்கும் விதத்தில் அதிகரிக்காத சம்பளம்தான் முக்கியக்காரணம். கூடவே சாதிக்கும் லட்சியங்களையும் கண்முன் நிறுத்தினால் பார்ட்னர் தேடுவதும், குழந்தைகளை பெறுவதும் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. குடும்பம், கலாசாரம் என்பதற்கு முதலிடம் தரும் தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் திருமணம் மறுத்து தனியாக வாழும் மக்கள் அதிகரித்து வருவது புதுமைதான் அல்லவா? ”சரியான ஆண் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது பொய். தனியாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இப்போது எனக்கு நானே பெஸ்ட் கம்பெனி என புரிந்துகொண்டேன்” என்கிறார் டெல்லி பத்திரிகையாளரான அயன்திராலி தத்தா. நவ.11 என்பதை சீன மக்கள் தனியாக வாழ்பவர்களு