இடுகைகள்

குழந்தை தொழிலாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.  ஆ

குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் டெக் நிறுவனம்!

படம்
அமேசானின் அலெக்சா ரக டெக் ஐட்டங்களை உருவாக்க சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பயன்படுத்தி வருவது வெளியாகி உள்ளது. சீனாவில் 1500 சிறுவர்கள் இம்முறையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை இன்டர்ன்ஷிப் என்ற பெயரில் ஆசிரியர்கள் சகிதமாக வந்து வேலை செய்து அப்பணத்தைப் பெறுகின்றனர். இது சீன தொழிலாளர்துறை விதிகளை மீறிய செயல் என தி கார்டியன் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்படும் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. இச்செய்தி பற்றி ஃபாக்ஸ்கான், நாங்கள் பள்ளி மாணவர்களை ஓவர்டைம் மற்றும் இரவுகளில் வேலைபார்க்க வைப்பதை தவிர்ப்போம் என்று கூறியுள்ளது. ”முதலில் எட்டுமணிநேரம் என்றுதான் ஆசிரியர் கூறினார். ஆனால் பின்னர் பத்து மணிநேரம் வேலை என்று ஃபாக்ஸ்கான் மேலாளர்கள் மிரட்டுகின்றனர். வேலை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடைக்காது என அச்சுறுத்தலும் உள்ளது” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர். இதனையும் சீனாவைச்சேர்ந்த தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.