இடுகைகள்

என்ஜிஓ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

படம்
          குழந்தைகள் விற்பனை - என்ஜிஓக்களின் தில்லுமுல்லு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி , தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது . அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர் . இவர்கள் இருவரும் , இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர் . இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி . ஆர் . சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம் . இந்த அமைப்பு , மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது . காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது . தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது . மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட் , பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது . இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும் , மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது . இவையன

என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்

படம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம். ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம். 2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான். மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உ

மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

படம்
மேஜிக் பஸ் சாதித்தது எப்படி? 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம். கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது? முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது. சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படி

விண்ணரசு என்ஜிஓக்களுக்கு கிடைக்குமா?

படம்
ப்ரீயா பேசுவோம் என்ஜிஓ எழுத்து கட்டுரை, நாவல் அனைத்திலும் என்ஜிஓ எழுத்து பிறந்துள்ளது. அப்படி என்றால், இவர்கள் பல்வேறு துறைகளில் எதற்கு வேலை செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை பார்ப்பார்கள். சிபாரிசு மூலம் நல்ல சம்பளம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேலை? அதெல்லாம் கேட்டால் கஷ்டம். பசங்க படம் அனைவருக்கும் பிடித்தாலும் அதில் நல்லவன் கெட்டவன் என்ற தன்மை பலரும் ஆட்சேபித்த ஒன்று. என்ஜிஓ எழுத்தாளர்களும் அப்படித்தான். சூழல் பற்றி எழுதச்சொன்னால், கட்டுரை நெல்மணிகள் அறுத்துவிட்டு வயலில் எறிந்த வைக்கோலைப் போல இருக்கும். சத்தும் இருக்காது. விஷயமும் இருக்காது. அப்படியே மேற்கத்திய அறிவிலிருந்து தரவிறக்கி எழுதுவது. இதனால் வலுக்கட்டாயமாக எழுதிய உணர்வு கட்டுரைகளை படிக்கும் அனைவருக்கும் இருக்கும். ஏன் நான் கூட அதுபோல செயற்கையாக எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து படிக்க டார்ச்சர் செய்திருக்கிறேன். ஆனால் அத்தவறை விரைவில் புரிந்துகொண்டு எழுதும் முறையை மாற்றிக்கொண்டேன். ஆனால் இந்த என்ஜிஓ சங்க எழுத்தாளர்கள், தாங்கள் எழுதும் கட்டுரையைக் கூட படிக்க முடியாமல் ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டிக்க