இடுகைகள்

துளசி கௌடா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை விருது என்பதே அப்ளிகேஷன் போட்டு வாங்குவது என்று மாறிவிட்டது. அரசு தனக்கென தனி குழுவை வைத்து சமூகத்திற்கு உழைப்பவர்கள், அதன் பாரத்தை தனது தோளில் சும்பபவர்களை பரிசளித்து கௌரவித்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அரசுக்கு விழா கொண்டாடுவது முக்கியமே ஒழிய, அதற்கான உழைப்பை போட எப்போதும் சோம்பல் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சில மனிதர்களை அதிகாரிகள் குழு எப்படியோ தேர்ந்தெடுத்து கௌரவம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அப்படி பத்ம விருது வென்ற சில மனிதர்களைப் பற்றி பார்க்கலாம். நந்தா கிஷோர் ப்ரஸ்டி கைவிளக்கு ஏற்றிய ஆசிரியர் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பரிசு வழங்கப்பட்ட மனிதர். கடந்த ஆண்டு டிசம்பரில் காலமாகிவிட்டார். ஆனால் இவர் கற்பித்த கல்வி பலரது வாழ்க்கையில் இருளை விலக்கியிருக்கிறது. அறிவு விளக்கை மனதில் ஏற்றியிருக்கிறது. ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர், எழுபது ஆண்டுகாலம் கல்வியை குழந்தைகள் முதல் வயது வந்தோருக்கும் கற்பித்து வந்திருக்கிறார். இச்ச

பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!

படம்
  சுந்தர்லால் பகுகுணா சுந்தர்லால் பகுகுணா சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது.  உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.  இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.    சாலுமாரதா திம்மக்கா சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார்.  குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வ