வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!
குகை - ஜெயமோகன் குறுநாவல் இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே க...